Vijay Deverakonda: அவர்களை கட்டிப் பிடிக்கவும் முத்தம் கொடுக்கவும் மறந்திட வேண்டாம்.. விஜய் தேவரகொண்டா அட்வைஸ்

ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகில் காதல் மன்னனாக வலம் வரும் கதாநாயகர்களில் ஒருவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவர் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் கிங்டம். இந்த படத்தின் புரோமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படம் வரும் ஜூலை மாதம் 4ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதற்கான பணிகளில் மொத்த படக்குழுவும் விறுவிறுப்பாக இயங்கி வருகிறார்கள். இந்நிலையில் விஜய் தேவரகொண்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள விஷயம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

விஜய் தேவரகொண்டா இன்னும் நேரடியாக தமிழ் படத்தில் நடிக்க வில்லை. ஆனாலும் அவருக்கு தமிழ்நாட்டில் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. குறிப்பாக இவருக்கு இளம் பெண்கள் பலரும் ரசிகர்களாக உள்ளார்கள். இவரும் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் இணைந்து நடித்த படங்கள் தமிழில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. அதேபோல், இவர் நடித்த காம்ரேட் மற்றும் அர்ஜுன் ரெட்டி போன்ற படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இவர் கடைசியாக கல்கி படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதேபோல் புஷ்பா 2 படத்தில் இவர்தான் கிளாமாக்ஸில் வரும் கேமியோ கதாபாத்திரம் என்று கூறப்படுகிறது. இது மட்டும் இல்லாமல் இவர் அடிக்கடி இணையவாசிகள் மத்தியில் விவாதிக்க படுவதற்கு காரணம், அவரது காதல் கதை. இவரும் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் காதலிக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இந்த காதல் கதை தொடர்பாக ராஷ்மிகா மந்தனா அரசல் புரசலாக ஏதாவது சொல்லி வருகிறார். ஆனால் விஜய் தேவரகொண்டா எதுவும் சொல்லாமல் கப்சிப் என்று இருக்கிறார். ஆனால் இவரது இன்ஸ்டாகிராம் பதிவுகள் இவரது காதல் குறித்த கிசுகிசுவை அதிகரிக்கச் செய்து விடுகிறது.

Vijay Deverakonda Instagram Post About Love The Parents And How to Live The Life

விஜய் தேவரகொண்டா: இப்படியான நிலையில் விஜய் தேவரகொண்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது குடும்பத்தினருடன் இரவு உணவு சாப்பிட வெளியில் ஹோட்டலுக்குச் சென்றது குறித்து பகிர்ந்துள்ளார். அவரது பதிவில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதாவது, விஜய் தேவரகொண்டாவின் தாயார், விஜய் தேவரகொண்டாவுக்கு வாட்ஸ்-அப்பில் சில மெசேஜ்களை அனுப்பியுள்ளார். அதற்கு விஜய் தேவரகொண்டாவும் பதில் அளித்துள்ளார்.

அம்மா: அதாவது விஜய் தேவரகொண்டாவின் தாயார், நாம் எங்காவது குடும்பத்துடன் ஹோட்டலுக்குச் சென்று டின்னர் சாப்பிட்டு விட்டு வரலாமா? உனக்கு நேரம் உள்ளதா? நாம் இதுபோல குடும்பமாக ஒன்றாக வெளியே போய், நேரம் செலவழித்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது என்று கூறுகிறார். உடனே விஜய் தேவரகொண்டாவும், அம்மா கொஞ்சம் நேரம் கொடுங்கள் நான் எங்கு உணவு நன்றாக இருக்கும் என்று விசாரித்துவிட்டு வருகிறேன் என்று கூறினார்.

Vijay Deverakonda Instagram Post About Love The Parents And How to Live The Life

குடும்பம்: அவர் தனது குடும்பத்துடன் டின்னருக்கு சென்ற புகைப்படங்களை பகிர்ந்துள்ள அவர், " அம்மா திடீரென நாம் அனைவரும் வெளியே போகலாமா என்று கேட்டார். நாங்கள் குடும்பமாக வெளியே சென்று வெகு நாட்கள் ஆகிவிட்டது. நாம் அனைவரும் வேலை மற்றும் லட்சியங்களை நோக்கி பயணிப்பதில், வாழ்க்கையை வாழ மறந்துவிடுகிறோம். நாங்கள் நேற்று இரவு மிகவும் மகிழ்ச்சியான ஒரு இரவைக் கழிக்க வெளியே சென்றிருந்தோம். உங்கள் பெற்றோர்களுடன் நேரம் செலவழிக்க மறந்துவிடாதீர்கள். அவர்களை வெளியே அழைத்துச் செல்லுங்கள். அவர்களை கட்டிப் பிடியுங்கள், அவர்களுக்கு முத்தம் கொடுங்கள், அவர்கள் மீது நீங்கள் அன்பு செலுத்துவதாக கூறுங்கள்" என்று பதிவிட்டுள்ளார். இவரது பதிவு இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. பலரும் இந்த டின்னரில் ராஷ்மிகா மந்தனா கலந்து கொண்டாரா என்று கேட்டு வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X