twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விராட் கோலியின் பயோபிக்கில் விஜய் தேவரகொண்டா?: ஏன் இதுவர உடைச்ச ஃபர்னிச்சர் எல்லாம் போதாதா?

    |

    துபாய்: விஜய் தேவரகொண்டா நடிப்பில் சமீபத்தில் வெளியான 'லைகர்' திரைப்படம் 25ம் தேதி வெளியாகியிருந்தது.

    பூரி ஜெகன்நாத் இயக்கிய 'லைகர்' பான் இந்தியா படமாக பல மொழிகளில் வெளியாகி தோல்வியைத் தழுவியதாக விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதியதை பார்க்க விஜய் தேவரகொண்டா துபாய் சென்றிருந்தார்.

    கலாய்த்த தியேட்டர் ஓனர்: காலில் விழுந்து கட்டியணைத்துக் கொண்ட விஜய் தேவரகொண்டாகலாய்த்த தியேட்டர் ஓனர்: காலில் விழுந்து கட்டியணைத்துக் கொண்ட விஜய் தேவரகொண்டா

    அந்தோ பரிதாபத்தில் லைகர்

    அந்தோ பரிதாபத்தில் லைகர்

    பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த 'லைகர்' திரைப்படம், கடந்த வாரம் 25ம் தேதி வெளியானது. விஜய் தேவரகொண்டா ஜோடியாக அனன்யா பாண்டேவும், முக்கியமான கேரக்டர்களில் மைக் டைசன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோரும் நடித்திருந்தனர். மிகப் பிரம்மாண்டமாக உருவாகியிருந்த 'லைகர்' படத்திற்கு ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், படம் வெளியாகி மோசமான விமர்சனங்களை பெற்றதால், பெரிய தோல்வியை சந்தித்து பரிதாப நிலைக்குச் சென்றுவிட்டது.

    விஜய் தேவரகொண்டா சவால்

    விஜய் தேவரகொண்டா சவால்

    'லைகர்' படத்திற்காக கடுமையாக உழைத்திருந்த விஜய் தேவரகொண்டா, தேவையில்லாமல் தனது வாயை கொடுத்து மாட்டிக் கொண்டார். பாலிவுட் நட்சத்திரங்கள் பாய்காட் செய்யப்படுவது குறித்து காட்டமாக பேசியதால், நெட்டிசன்களின் டார்க்கெட்டில் வசமாக சிக்கினார். இதனைத் தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவையும் நெட்டிசன்கள் பாய்காட் செய்தனர். இதற்கும் வம்படியாக பதில் கொடுத்த விஜய் தேவரகொண்டா, யார் நினைத்தாலும் லைகர் வெற்றியை தடுக்க முடியாது என சவால் விட்டார். அதனால் கடுப்பான ரசிகர்கள், லைகர் படத்தை தியேட்டரை விட்டே ஓடவிட்டனர்.

    துபாயில் விஜய் தேவரகொண்டா

    துபாயில் விஜய் தேவரகொண்டா

    இதனையடுத்து லைகர் படத்தின் தோல்விக்கு விஜய் தேவரகொண்டா தான் காரணம் என விமர்சனங்கள் எழுந்தன. மும்பையைச் சேர்ந்த மல்டிபிளக்ஸ் ஓனர் தேசாய், விஜய் தேவரகொண்டாவை கடுமையாக சாடியிருந்தார். உடனே விஜய் தேவரகொண்டா மும்பை சென்று தேசாவின் காலில் விழுந்து கூல் செய்திருந்தார். அதன்பின்னர் அங்கிருந்து துபாய் பறந்த விஜய் தேவரகொண்டா, ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியை பார்த்து ரசித்தார்.

    விராட் கோலியின் பயோபிக்?

    விராட் கோலியின் பயோபிக்?

    இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின் போது தெலுங்கு கமெண்ட்ரி குழுவினருடன் இணைந்த விஜய் தேவரகொண்டா, அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவரிடம் எந்த கிரிக்கெட் வீரரின் பயோபிக்கில் நடிக்க ஆசை என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த விஜய் தேவரகொண்டா, "எனக்கு தோனியின் பயோபிக்கில் நடிக்க ஆசை. ஆனால், அது ஏற்கனவே வெளியாகிவிட்டது. அதனால் இப்போது விராட்கோலியின் பயோபிக் உருவானால் அதில் நடிக்க ஆசையாக இருக்கு" எனத் தெரிவித்தார். இதற்கு விராட் கோலியின் ரசிகர்கள், "இதுவர உடைச்ச ஃபர்னிச்சர் எல்லாம் போதாதா" என்றவாறு கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

    English summary
    Vijay Devarakonda's starrer 'Liger' did not get the expected success. It was alleged that Vijay Devarakonda was responsible for the failure of Ligar. Now he has said that he wants to act in Virat Kohli's biopic
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X