“ஆப்கெல்லா ஐலசா பாணியில் அனன்யா பாண்டேவை அலேக்காக தூக்கிய விஜய் தேவரகொண்டா”: இப்படியும் ப்ரோமோஷனா?
பஞ்சாப்: தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள ''லைகர்' படம் வரும் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்தப் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி இந்தியாவின் முக்கியமான நகரங்களில் நடைபெற்று வருகிறது.
பஞ்சாப்பில் நடந்த 'லைகர்' படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் விஜய் தேவரகொண்டா செய்த சம்பவம், ரசிகர்களுக்கு ஷாக்கிங் கொடுத்துள்ளது.

விஜய் தேவரகொண்டாவின் ஆக்சன் ட்ரீட்
'அர்ஜுன் ரெட்டி' படத்திற்குப் பின்னர், தெலுங்கு சினிமாவில் டாப் கியரில் சென்றுகொண்டிருக்கும் விஜய் தேவரகொண்டா, தற்போது ‘லைகர்' படத்தில் நடித்து முடித்துள்ளார். விஜய் தேவரகொண்டா பாக்ஸராக நடித்துள்ள இப்படம், ஸ்போர்ட்ஸ் ஜானரில் செம்ம ஆக்சன் ட்ரீட்டாக இருக்கும் என சொல்லப்படுகிறது. அதனை கன்ஃபார்ம் பண்ணும் விதமாக, ‘லைகர்' படத்தின் ட்ரெய்லர் ஏற்கனவே வெளியாகி, எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

முதன்முறையாக மைக் டைசன்
பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ரொம்ப பிரமாண்டமாக உருவாகியுள்ள ‘லைகர்' படத்தில், பிரபல குத்துச்சண்டை சாம்பியன் மைக் டைசனும் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். மைக் டைசன் முதன்முறையாக இந்திய சினிமாவில் நடித்துள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அவரது கேரக்டர் பற்றியும் அதிகம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

விஜய்க்கு ஜோடியாக அனன்யா பாண்டே
'லைகர்' படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ஹாலிவுட் ஹாட் சாக்லேட் அனன்யா பாண்டே நடித்துள்ளார். ‘லைகர்' படத்தில் இருந்து இதுவரை வெளியான பாடல்களில், இந்த ஜோடியின் கெமிஸ்ட்ரி தாறுமாறாக ஒர்க்அவுட் ஆகியுள்ளது. மேலும், இருவரும் ‘லைகர்' படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக தொடர்ந்து விமானத்தில் பறந்துகொண்டே இருக்கின்றனர்.
Recommended Video

பஞ்சாப்பில் பல்லாக்குத் தூக்கிய விஜய்
விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே இருவரும் கரன் ஜோகரின் ‘காஃபி வித் கரன் 7' நிகழ்ச்சியில் பங்கேற்று, ஹாட்டான கேள்விகளுக்கு செம்ம கூலாக பதில் சொல்லி, ரசிகர்களை சூடேற்றினர். இந்நிலையில் இப்போது பஞ்சாப்பில் நடந்த ‘லைகர்' ப்ரோமோஷனுக்காக இந்த ஜோடி அங்கு சென்றுள்ளது. அப்போது இருவரும் டிராக்டரின் மேல் அமர்ந்து போட்டோ எடுத்துக்கொண்டனர். அதோடு விட்டுவிடாமல் அனன்யா பாண்டேவை அலேக்காக தூக்கிய விஜய் தேவரகொண்டா, அவரை பல்லாக்குப் போல சுமந்து சென்றுள்ளார். இந்த போட்டோக்கள், ரசிகர்களை இன்னும் சூடேற்றியுள்ளது.


Click it and Unblock the Notifications











