Vijay Devarakonda: சீதா ராமம் நாயகியை டார்க்கெட் செய்த விஜய் தேவரகொண்டா... அப்போ ராஷ்மிகா மந்தனா?
ஹைதராபாத்: டோலிவுட்டின் சாக்லேட் ஹீரோ விஜய் தேவரகொண்டா தனது 13வது படத்திற்கு ரெடியாகிவிட்டார்.
முன்னதாக சமந்தாவுடன் அவர் நடித்துள்ள குஷி திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
அதனால், தனது 13வது படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளார் விஜய் தேவரகொண்டா.
இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக சீதா ராமம் புகழ் மிருணாள் தாகூர் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.

விஜய் தேவரகொண்டாவுடன் இணையும் மிருணாள்:டோலிவுட்டின் சாக்லெட் ஹீரோ விஜய் தேவரகொண்டாவுக்கு ஏராளமான ரசிகைகள் உள்ளனர். 2011 முதல் படங்களில் நடித்து வந்தாலும் அர்ஜுன் ரெட்டி தான் விஜய் தேவரகொண்டாவுக்கு பெரிய கம்பேக் கொடுத்தது. அதன்பின்னர் கீதா கோவிந்தம் படமும் விஜய் தேவரகொண்டாவின் கேரியரில் சூப்பர் ஹிட் அடித்தது.
இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இருவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரியில் ரசிகர்களே சொக்கிதான் போய்விட்டனர். அதனைத் தொடர்ந்து டியர் காம்ரேட் படத்திலும் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா ஜோடி மாஸ் காட்டியது. அதுமட்டும் இல்லாமல் ரியல் லைஃபிலும் இருவரும் காதல் ஜோடியாக வலம் வருகின்றனர்.
சமீபத்தில் கூட விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகாவும் வெளிநாடுகளுக்குச் சென்று காதல் வானில் சிறகடித்தனர். ஆனால், குஷி படத்தில் நடித்த விஜய் தேவரகொண்டா சமந்தா உடன் நெருக்கம் காட்டினார். குஷி ஷூட்டிங் ஸ்பாட்டில் இருவரும் ரொமான்ஸ் செய்யும் போட்டோஸ் வெளியாகி வைரலானது. இந்நிலையில் அடுத்து மிருணாள் தாகூர் உடன் ரொமான்ஸ் செய்ய ரெடியாகிவிட்டார் விஜய் தேவரகொண்டா.

கீதா கோவிந்தம் இயக்குநர் பரசுராம் உடன் மீண்டும் இணைந்துள்ளார் விஜய் தேவரகொண்டா. தில் ராஜூ தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தில் அவர் ஜோடியாக மிருணாள் தாகூர் நடிக்கவுள்ளார். கீதா கோவிந்தம் கூட்டணியான விஜய் தேவரகொண்டா, இயக்குநர் பரசுராம் மீண்டும் இணைவதால், ராஷ்மிகா மந்தனா தான் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்குப் பதிலாக மிருணாள் தாகூர் நடிக்கவிருக்கிறாராம்.
சீதா ராமம் படத்தில் துல்கர் சல்மான் ஜோடியாக நடித்து பிரபலமானவர் மிருணாள் தாகூர். இந்தப் படத்தில் ரொம்பவே பிரபலமான மிருணாள், அடுத்து நானியின் 30வது படத்தில் நடித்து வருகிறார். இன்னொரு பக்கம் தனது இன்ஸ்டாவில் கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார். இந்நிலையில் ரொமாண்டிக் கிங் விஜய் தேவரகொண்டாவுடன் மிருணாள் தாகூர் இணைவது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











