ரூ. 40 கோடியை வேண்டாம் என்று சொன்ன விஜய்

By Siva

மும்பை: நடிகர் விஜய் தேவரகொண்டா ரூ. 40 கோடி பட வாய்ப்பை ஏற்க மறுத்துள்ளார்.

விஜய் தேவரகொண்டா, ரஷ்மிகா மந்தனா நடிப்பில் கடந்த மாதம் 26ம் தேதி வெளியான டியர் காம்ரேட் தெலுங்கு படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படம் தள்ளிப் போய் தள்ளிப் போய் ஒரு வழியாக ரிலீஸானது.

Vijay Deverakonda refuses to accept Karans Rs. 40 crore offer

இந்நிலையில் அந்த படத்தின் இந்தி ரீமேக் உரிமையை பிரபல பாலிவுட் இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹார் ரூ. 6 கோடி கொடுத்து வாங்கியுள்ளார். முன்னதாக விஜய் மும்பைக்கு சென்று கரண் ஜோஹாரை சந்தித்து பேசினார்.

அப்பொழுது கரண் டியர் காம்ரேட் படத்தை பார்த்தது மட்டும் அல்லாமல் விஜய்யை பாலிவுட்டில் அறிமுகம் செய்து வைக்க விரும்பி நீங்களே ரீமேக்கில் நடித்துவிடுங்களேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் ரூ. 40 கோடி சம்பளம் தருவதாகவும் கரண் ஜோஹார் விஜய் தேவரகொண்டாவிடம் தெரிவித்தாராம்.

எத்தனை கோடி கொடுத்தாலும் ரீமேக்கில் நடிக்கும் ஐடியா இல்லை என்று கூறிவிட்டாராம் விஜய். முன்னதாக அர்ஜுன் ரெட்டி இந்தி ரீமேக்கான கபிர் சிங்கில் நடிக்க விஜய்க்கு வாய்ப்பு கிடைத்தது. ஒரே கதாபாத்திரத்தில் மீண்டும் நடிக்க விருப்பம் இல்லை என்று கூறிவிட்டார் அவர்.

கபிர் சிங் படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டாகியுள்ளது. ஆனால் அந்த படத்தை விஜய் தேவரகொண்டா பார்க்கவில்லை. ஏன் பார்க்கவில்லை என்று கேட்டதற்கு, தெரிந்த கதை தானே அதை போய் மறுபடியும் என்னத்த பார்க்க என்று கேட்டு அதிர வைத்தார்.

இந்தி படங்களில் நடிப்பது குறித்து விஜய் தேவரகொண்டா கூறியதாவது,

இந்தி படங்களில் நடிப்பது சுவாரஸ்யமானது தான். ஆனால் தெலுங்கு மற்றும் இந்தி என்று இரு தரப்பு ரசிகர்களுக்கும் ஏற்ற வகையில் ஏதாவது செய்ய வேண்டும். ஹைதராபாத்தில் இருந்து மும்பைக்கு வந்து அபார்ட்மென்ட்டில் தங்க எனக்கு இஷ்டமில்லை. என் நண்பர்கள் ஹைதராபாத்தில் தான் உள்ளனர்.

மும்பையில் வாழ்க்கை ரொம்பவே வேகமாக உள்ளது. எனக்கு அது ஒத்து வராது என்று தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X