அந்த மாஸ்க்குகளை அவர்களுக்கு விட்டு வையுங்க.. மக்களிடம் இப்படியொரு கோரிக்கை வைத்த விஜய் தேவரகொண்டா!
ஹைதராபாத்: டோலிவுட் நடிகர் விஜய் தேவரகொண்டா, தனது ட்விட்டர் பக்கத்தில் மக்களிடம் ஒரு அன்பான வேண்டுகோளை விடுத்துள்ளார்.
Recommended Video
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்களை பலி கொண்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் நம் நாட்டில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மக்களிடம்
இந்நிலையில், அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்த டோலிவுட் நடிகர் விஜய் தேவரகொண்டா பொது மக்களிடம் ஒரு அன்பான வேண்டுகோளை விடுத்துள்ளார். மருத்துவ மாஸ்க்குகளை மருத்துவர்கள் மற்றும், சுகாதார பணிகளில் ஈடுபடும் நபர்களுக்காக விட்டு வையுங்கள் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
துணியில் செய்த மாஸ்க்
வீட்டில் இருக்கும் நாம், துணிகளால் செய்யப்படும் மாஸ்க் மற்றும், கர்ச்சிப்களை சின்ன சின்ன தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். துணிகளால் செய்யப்படும் மாஸ்க்குகளால் அதிகளவில் கொரோனா பாதிப்பு ஏற்படாது என்றும் கூறுகின்றனர் என விஜய் தேவரகொண்டா மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத் துறையினரின் நலன் கருதி இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.

டிமாண்ட்
கொரோனா வைரஸ் பயத்தால், நாடு முழுவதும் வீட்டில் இருக்கும் பொதுமக்களும், அடிக்கடி வெளியே செல்ல வேண்டிய தேவைகளை வைத்துக் கொண்டு, இதுபோன்ற மருத்துவ மாஸ்க்குகளை வாங்கிக் குவித்து விடுகின்றனர். இதனால், மருத்துவர்கள், செவிலியர்கள், போலீஸ்காரர்கள் மற்றும் சுகாதாரத் துறையினர்களுக்கு மாஸ்க்குகள் கிடைக்காமல் பற்றாக்குறை ஏற்பட்டு விடுகிறது.
செம பாடி
வீட்டில் இருந்தபடியே தனது முகத்தில் துணியால் செய்யப்பட்ட மாஸ்க் அணிந்துக் கொண்டு நடிகர் விஜய் தேவரகொண்டா பதிவிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், செம பாடி என கண் வைத்து வருகின்றனர். குவாரண்டின் நேரத்தில் வீட்டிலேயே வொர்க்கவுட் செய்து மெயின்டெயின் பண்ணுறீங்களா உங்க அடுத்த படம் ஃபைட்டருக்காக வெயிட்டிங் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











