கோடையில் மக்களுக்கு இலவசமாக ஐஸ்கிரீம் கொடுக்கும் கூல் 'விஜய்'
Recommended Video

ஹைதராபாத்: நடிகர் விஜய் தேவரகொண்டா கோடை காலத்தில் பொதுமக்களுக்காக செய்துள்ள கூல் காரியம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
அர்ஜுன் ரெட்டி படம் மூலம் பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. அவர் தற்போது ஆனந்த் ஷங்கர் இயக்கி வரும் நோட்டா படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
தெலுங்குக்காரராக இருந்தாலும் தமிழ் வசனங்களை எளிதில் பேசி அனைவரையும் அசத்தி வருகிறார்.
விஜய்
வெயிலில் சில நாட்களாக ஷூட்டிங்கில் கலந்து கொண்டதால் இப்படி யோசிக்கத் தோன்றியது. வெயிலின் தாக்கத்தை போக்க 3 ஐஸ்கிரீம் டிரக்குகளை ஊருக்குள் உலவவிட்டு அனைவருக்கும் இலவசமாக ஐஸ்கிரீம் கொடுத்தால் என்ன என்று தோன்றியது என விஜய் ட்வீட்டியுள்ளார்.
ஐஸ்கிரீம்
தேவரகொண்டா பர்த்டே டிரக் ஹைதராபாத்தில் சுற்றுகிறது. அதை பார்த்தால் வெட்கப்படாமல் நிறுத்தி ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிடவும் என்று விஜய் தெரிவித்துள்ளார்.
மகிழ்ச்சி
நான் உங்களின் மகிழ்ச்சியான முகங்களை பார்க்க உங்களின் புகைப்படங்களை அனுப்புங்கள். உங்களின் முகத்தில் உள்ள மகிழ்ச்சியை பார்த்தால் எனக்கு சந்தோஷமாக இருக்கும் என்கிறார் விஜய் தேவரகொண்டா.
சென்னை
விஜய்யின் ட்வீட்டை பார்த்த ரசிகை ஒருவர் அப்படியே சென்னைக்கும் ஒரு டிரக் அனுப்பி வைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

வாழ்த்து
விஜய் தேவரகொண்டா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











