ராஷ்மிகா என்னோட பெஸ்ட் பிரண்ட்.. அதான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.. ஓபனாக உடைத்த விஜய் தேவரகொண்டா
ஹைதராபாத்: நடிகை ராஷ்மிகா மந்தனா - நடிகர் விஜய் தேவரகொண்டா திருமணம் வெகு சிறப்பாகவும் பிரமாண்டமாகவும் நடைபெற்றது. ரசிகர்கள் தொடங்கி பிரபலங்கள் வரை பலரும் புதுமணத் தம்பதியருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இப்படி இருக்கையில் நடிகர் விஜய் தேவரகொண்டா தனது திருமண புகைப்படங்களை பகிர்ந்து, தனது காதல் மனைவி ராஷ்மிகா மந்தனா குறித்து பகிர்ந்துள்ளார்.
அவரது பதிவில், " ஒரு நாள் நான் அவளை ரொம்பவும் மிஸ் செய்தேன். அவள் மட்டும் அருகில் இருந்திருந்தால், அன்று நான் கடந்து வந்த ஒவ்வொரு தருணமும் இன்னும் சிறப்பானதாக அழகானதாக இருந்திருக்கும் என்று எனக்குத் தோன்றியது. நான் சாப்பிடும் சாப்பாட்டின் ருசியை விட, எனக்கு முன்னால் அவள் அமர்ந்து சாப்பிடும் போது கிடைக்கும் அந்த முழுமையையே என் மனம் தேடியது.

ஜிம்மில் செய்யும் கடினமான உடற்பயிற்சிகள் கூட ஒரு தண்டனையாக தெரியாமல், அவள் உடன் இருந்தால் அது ஒரு அழகான விளையாட்டாக மாறியிருக்கும் என்று நான் நினைத்தது எல்லாம் உண்டு. நான் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், அவள் உடனிருந்தால் மட்டுமே எனக்குள் ஒரு அமைதியும், 'சொந்த வீட்டில் இருக்கிறோம்' என்கிற பாதுகாப்பான உணர்வும் திருப்தியும் கிடைக்கிறது. அதனால் தான் நான் எனது சிறந்த தோழியை, எனது மனைவியாக்கிக் கொண்டேன்"என்று பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவுடன் தனது திருமணப் புகைப்படங்கள் மற்றும் ஒரு வீடியோவையும் பகிர்ந்துள்ளார் விஜய் தேவரகொண்டா. புதுமணத் தம்பதியர்களுக்கு ரசிகர்கள் கமெண்ட் செக்ஷனில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.



Click it and Unblock the Notifications