ஃபைட்டர் இல்லையாம்.. விஜய் தேவரகொண்டா நடிக்கும் பட டைட்டில் இதுதான்.. பர்ஸ்ட் லுக் மிரட்டுதே!
சென்னை: விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் இன்று வெளியிடப் பட்டுள்ளது.
தமிழில், நடிகையர் திலகம், நோட்டா , டியர் காம்ரேட் ஆகிய படங்களில் நடித்தவர், தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா.
அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் பிரபலமான இவர், கடைசியாக வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற படத்தில் நடித்திருந்தார்.

சம்பளத்தில் பாதி
இந்த படம் தமிழிலும் அதே பெயரில் டப் ஆனது. இதில் 4 ஹீரோயின்கள் நடித்திருந்தனர். இந்த படம் சரியாக ஓடவில்லை. அதற்கு விஜய் தேவரகொண்டா கதையில் தலையிட்டதுதான் காரணம் என்று கூறப்பட்டது. இதனால் அந்தப் படத்தின் தயாரிப்பாளர் அவரிடம் நஷ்ட ஈடு கேட்டிருந்தார். விஜய் தேவரகொண்டா, தனது சம்பளத்தில் பாதியை கொடுத்ததாகக் கூறப்பட்டது.

3 மொழிகளில்
விஜய் தேவரகொண்டா, இப்போது புரி ஜெகநாத் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதை நடிகை சார்மியும் புரி ஜெகநாத்தும் இணைந்து தயாரிக்கின்றனர். இந்தப் படம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாள மொழிகளில் உருவாகிறது. இந்தியில் கரண் ஜோஹர், ஆபூர்வா மேத்தா தயாரிக்கின்றனர்.

மும்பை ஷூட்டிங்
இதில் அனன்யா பாண்டே ஹீரோயினாக நடிக்கிறார். இவர், இந்தி நடிகர் சங்கி பாண்டேவின் மகள். இந்தியில், ஸ்டூடன்ட் ஆப் த இயர் 2, 'பதி பத்னி அவுர் வோ' ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். விஜய் தேவரகொண்டா படத்தின் ஷூட்டிங் மும்பையில் தொடந்து 40 நாட்கள் நடந்தது.

பெண் புலி சேர்க்கை
கொரோனா காரணமாக தடைபட்டிருந்த இதன் ஷூட்டிங் மீண்டும் தொடங்கவில்லை. இந்நிலையில் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் இன்று வெளியிடப்பட்டது. இந்த படத்துக்கு Liger என்று டைட்டில் வைத்துள்ளனர். Liger என்பது ஆண் சிங்கம் மற்றும் பெண் புலி சேர்க்கை மூலம் உருவாகிய கலப்பு உயிரினம்.

ரம்யா கிருஷ்ணன்
டைட்டில் போஸ்டரில், விஜய் தேவரகொண்டா பாக்சர் லுக்குடன் இருக்கிறார். பின்னணியில், லைகர் இருக்கிறது. படத்தில், பாக்சராக நடிக்கிறார். இந்த லுக் மிரட்டலாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இதற்காக தாய்லாந்தில் சில நாட்கள் அவர் பயிற்சிப் பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் தேவரகொண்டாவின் அம்மாவாக ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார்.


Click it and Unblock the Notifications











