twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தொடர் வீழ்ச்சியில் லைகர்..சரிவில் 4 ஆம் நாள் வசூல்..டைசனே வந்தாலும் கதை இல்லன்னா அம்போதான்

    |

    ஐதராபாத் : நடிகர் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு வெளியானது லைகர்.

    இந்தப் படம் ரிலீசான நாளிலிருந்தே கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதனால் படத்தின் வசூல் பாதிக்கப்பட்டது.

    இந்நிலையில் கடந்த 4 நாட்களில் இந்தப் படத்தின் வசூல் குறித்த நிலவரத்தை ஆந்திர பாக்ஸ் ஆபிஸ் வெளியிட்டுள்ளது.

    அதுக்குள்ள லலித் மோடியை கழட்டிவிட்டுட்டாரா? சுஸ்மிதா சென் இப்போ யார் கூட சுத்துறாருன்னு பாருங்க! அதுக்குள்ள லலித் மோடியை கழட்டிவிட்டுட்டாரா? சுஸ்மிதா சென் இப்போ யார் கூட சுத்துறாருன்னு பாருங்க!

    நடிகர் விஜய் தேவரகொண்டா

    நடிகர் விஜய் தேவரகொண்டா

    நடிகர் விஜய் தேவரகொண்டா, பல காதல் சப்ஜெக்ட்களில் நடித்து சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை பெற்றவர். பல படங்களில் காதல் மட்டுமில்லாமல் ஆக்ஷனிலும் கலக்கி வரும் விஜய் தேவரகொண்டா தற்போது சூப்பர் ஆக்ஷன் படமான லைகரில் நடித்துள்ளார். இந்தப் படம் கடந்த 25ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசானது.

    குத்துச்சண்டை வீரர் மைக் டைசன்

    குத்துச்சண்டை வீரர் மைக் டைசன்

    லைகர் படத்தை பூரி ஜெகன்னாத் இயக்கியிருந்தார். படத்தில் பாலிவுட் நாயகி அனன்யா பாண்டே விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடி சேர்ந்திருந்தார். மேலும் ரம்யா கிருஷ்ணன், பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் ஆகியோரும் இந்தப் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளனர்.

     பூமாரங் விமர்சனங்கள்

    பூமாரங் விமர்சனங்கள்

    படத்துக்கு முன் விஜய் தேவரகொண்டா கொடுத்த பில்டப்புக்கும் படத்துக்கும் சம்பந்தமே இல்லை என்பதை படம் ரிலீசான முதல் நாளிலிருந்தே ரசிகர்கள் பார்த்து கடுமையான விமர்சனங்களை வைத்தனர். இந்தப் படத்தை நிராகரிப்பதாக ஹாஷ்டேக்குகள் ட்ரெண்ட்டான நிலையில், அதுகுறித்து விஜய் தேவரகொண்டாவும் கண்டபடி தனது விமர்சனங்களை பதிவு செய்திருந்தார். இது மேலும் நிலைமையை சிக்கலாக்கியது. மைக் டைசனே வந்தாலும் நல்ல கதை, காட்சி அமைப்பு இருந்தாதான் ஓடும் என்பதை ரசிகர்கள் காட்டிவிட்டார்கள்.

    4 நாட்களில் வசூல் நிலவரம்

    4 நாட்களில் வசூல் நிலவரம்

    இந்நிலையில் முதல்நாளில் இந்தப் படம் சர்வதேச அளவில் 33.12 கோடி ரூபாய்களை வசூலித்தது. ஆனால் அடுத்தடுத்த நாட்களில் படத்தில் வசூல் குறைந்தது. 4வது நாளான நேற்றைய தினம் படம் 5.50 கோடி ரூபாய் வசூலை சர்வதேச அளவில் பெற்றுள்ளது. இதனிடையே கடந்த 4 நாட்களில் படம் சர்வதேச அளவில் 43 கோடி ரூபாய்களை வசூலித்துள்ளது.

    வசூல் குறித்து ஆந்திர பாக்ஸ் ஆபிஸ்

    வசூல் குறித்து ஆந்திர பாக்ஸ் ஆபிஸ்

    தெலுங்கில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் அதிகமான ரசிகர்களை கொண்ட விஜய் தேவரகொண்டாவின் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள லைகர் படம் 4 நாட்களில் 50 கோடிகளைகூட வசூலிக்கவில்லை என்றாலும், கலவையான விமர்சனங்களுக்கு இடையில் படம் 43 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளதாக ஆந்திர பாக்ஸ் ஆபிஸ் தெரிவித்துள்ளது.

    சம்பளத்தை ஏற்றிய விஜய் தேவரகொண்டா

    சம்பளத்தை ஏற்றிய விஜய் தேவரகொண்டா

    இனிவரும் நாட்களில் இந்தப் படம் தொடர்ந்து வசூலிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மிகுந்த சர்ச்சைகளுக்கிடையில் வெளியான நிலையிலும் விஜய் தேவரகொண்டாவின் ரசிகர்களை படம் ஈர்த்துள்ளது. இந்தப் படத்திற்காக தன்னுடைய சம்பளத்தை விஜய் தேவரகொண்டா ஏற்றியுள்ளதாக முன்னதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Vijay Deverakonda's Liger movie crossed Rs.43 crores in 4 days
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X