வோர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் டீசர் ரிலீஸ்… அர்ஜுன் ரெட்டி பார்ட் 2வா என நெட்டிசன்கள் கலாய்!

ஹைதராபாத்: அர்ஜுன் ரெட்டி நாயகன் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள வோர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

இயக்குநர் கிரந்தி மாதவ் இயக்கத்தில் அஜய் தேவரகொண்டா நடித்துள்ள வோர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் படத்தில் அவருக்கு ஜோடியாக நான்கு ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.

தற்போது வெளியாகியுள்ள வோர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் டீசரை பார்த்த நெட்டிசன்கள் என்னடா இது அர்ஜுன் ரெட்டி பார்ட் 2வா என கலாய்த்து வருகின்றனர்.

வோர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் டீசர்

வோர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் டீசர்

கே.ஏ. வல்லபா தயாரிப்பில் கிரந்தி மாதவ் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ராஷி கண்ணா, ஐஸ்வர்யா ராஜேஷ், கேத்ரின் தெரசா, இசபெல்லா லெய்ட் நடிப்பில் உருவாகியுள்ள வோர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் படத்தின் டீசர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

நான்கு நாயகிகள்

விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள வோர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் படத்தில் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ், ராஷி கண்ணா, கேத்ரின் தெரசா, இசபெல்லா லெய்ட் என மொத்தம் நான்கு நாயகிகள் நடித்துள்ளனர்.

செம வாழ்வு

அர்ஜுன் ரெட்டி படத்தில் ஷாலினி பாண்டேவை நொடிக்கு நொடிக்கு லிப் கிஸ் அடித்து நடித்து இருந்த விஜய் தேவரகொண்டா இந்த படத்தில் நான்கு நாயகிகளுடன் செமயாக வாழ்ந்து உள்ளார் என்பது டீசரை பார்த்தாலே தெரிகிறது.

நிர்வாண குளியல் போடுறது யாரு?

வோர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் படத்தின் டீசரில் வரும் முதல் காட்சி ரசிகர்களிடையே மிகப்பெரிய ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த காட்சியில் எந்த நடிகை இப்படி நிர்வாணமாக குளிக்கிறார் என்ற கேள்வி தான் அது. பலரும் இது ராஷி கண்ணா தான் என்கின்றனர்.

அர்ஜுன் ரெட்டி பார்ட் 2

ஹேண்ட்ஸமான வாலிபன், ஆக்ரோஷமான மனிதன் என இந்த படத்திலும் அர்ஜுன் ரெட்டியை நினைவுப்படுத்தும் விதமாகவே விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார்.

ஆட்டோகிராஃப்

ஆட்டோகிராஃப்

வோர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் டீசர் பார்த்த கோலிவுட் ரசிகர்கள் மீண்டும் சேரனின் ஆட்டோகிராஃப் படம் பார்த்தது போலவே இருக்கிறது என யூடியூபில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

எவ்ளோ எதிர்த்தாலும்

பெண்களை மிகவும் மோசமாக கொச்சைப்படுத்திய படம் தான் அர்ஜுன் ரெட்டி என இந்திய நடிகர்கள் மீட்டில் விஜய் தேவரகொண்டாவை வைத்துக் கொண்டே மலையாள நடிகை பார்வதி சாடினார். அர்ஜுன் ரெட்டி படம் இந்தியளவில் வசூலை குவித்தாலும், அதே அளவுக்கு சர்ச்சைகளையும் கிளப்பியது. இந்நிலையில், எவ்ளோ எதிர்த்தாலும் அதே மாதிரியான படத்தை தான் கொடுப்பேன் என விஜய் தேவரகொண்டா நடித்து வருகிறார்.

இது தான் ஒர்க்கவுட் ஆகுது

தன்னிடம் இருந்து இதுமாதிரியான நடிப்பைத் தான் ரசிகர்கள் விரும்புகின்றனர் என விஜய் தேவரகொண்டா நினைத்துள்ளார் போல தெரிகிறது. கடைசியாக அவர் நடிப்பில் வெளியான டியர் காம்ரேட் படம் தோல்வியை சந்தித்த நிலையில், மீண்டும் அர்ஜுன் ரெட்டி பாணி கதையை தேர்வு செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X