'என் காதல் விஷயத்தை சொல்ல மாட்டேன்... அதை ஏன் வெளியில சொல்லணும்?' கேட்கிறார் பிரபல இளம் ஹீரோ
ஐதராபாத்: என் காதல் விஷயங்களை நான் ஏன் வெளியில் சொல்ல வேண்டும் என்று கேட்டிருக்கிறார், அந்த பிரபல ஹீரோ.
தமிழில், நடிகையர் திலகம், நோட்டோ, டியர் காம்ரேட் ஆகிய படங்களில் நடித்தவர், தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா.
அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் பிரபலமான இவர், கடைசியாக வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற படத்தில் நடித்திருந்தார்.

இந்தி, தெலுங்கு, தமிழ்
விஜய் தேவரகொண்டா இப்போது புரி ஜெகநாத் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதற்கு ஃபைட்டர் என்று தற்காலிகமாக டைட்டில் வைத்துள்ளதாகத் தெரிகிறது. இதை நடிகை சார்மியும் புரி ஜெகநாத்தும் இணைந்து தயாரிக்கின்றனர். இந்தப் படம் இந்தி, தெலுங்கு மற்றும் தமிழிலும் உருவாகிறது. இந்தியில் கரண் ஜோஹர், ஆபூர்வா மேத்தா தயாரிக்கின்றனர்.

ரம்யா கிருஷ்ணன்
இதில் அனன்யா பாண்டே ஹீரோயினாக நடிக்கிறார். இவர், இந்தி நடிகர் சங்கி பாண்டேவின் மகள். இந்தியில், ஸ்டூடன்ட் ஆப் த இயர் 2, 'பதி பத்னி அவுர் வோ' ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். விஜய் தேவரகொண்டா படத்தின் ஷூட்டிங் மும்பையில் தொடந்து 40 நாட்கள் நடந்தது. இதில் பாக்சராக விஜய் தேவரகொண்டா நடிப்பதாகக் கூறப்படுகிறது. ரம்யா கிருஷ்ணன் அவர் அம்மாவாக நடிக்கிறார்.

ராஷ்மிகா மந்தனா
இந்நிலையில் விஜய் தேவரகொண்டாவும் நடிகை அனன்யா பாண்டேவும் காதலித்து வருவதாகச் செய்திகள் வெளியாயின. ஏற்கனவே, நடிகை ராஷ்மிகா மந்தனா உட்பட சில நடிகைகளுடன் கிசுகிசுக்கப் பட்டிருந்தார். இந்நிலையில் அனன்யா பாண்டேவை காதலிப்பது பற்றி கேட்டபோது, 'நான் ஏன் என் காதலை வெளியில் சொல்ல வேண்டும்?' என்று கேட்டார்.

ஏன் சொல்ல வேண்டும்?
அவர் கூறும்போது, என் சொந்த வாழ்க்கையை மற்றவர்களின் பொழுதுபோக்கு ஆக்க விரும்பவில்லை. ஒரு வேளை நான் காதலித்தாலும் அதை என் நண்பர்கள், பெற்றோர்களை தவிர மற்றவர்களிடம் சொல்ல மாட்டேன். அதை ரகசியமாகவே வைத்திருப்பேன். ஏன் சொல்ல வேண்டும்? அதை சொல்வதால் என்ன பயன் கிடைத்துவிடப் போகிறது' என்று கேட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











