For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  நிர்வாண போட்டோஷூட்டுக்கு ரெடியான அடுத்த நடிகர்..ஆளாளுக்கு இப்படி போஸ் கொடுத்த எப்படி?

  |

  சென்னை : நிர்வாண போட்டோஷூட்டுக்கு நானும் ரெடியாக இருப்பதாக பிரபல நடிகர் தெரிவித்துள்ளார்.

  கடந்த சில நாட்களாக அனைத்து ஊடகங்களிலும், சமூகவலைத்தள பக்கத்திலும் டாக் ஆஃப் தி ஸ்டோரியாக இருப்பது ரன்வீர் சிங்கின் நிர்வாண போஸ் தான். ரன்வீர் சிங் நிர்வாண போட்டோஷூட்டை தொடர்ந்து, நடிகர் விஷ்ணு விஷாலும் நிர்வாணமாக போஸ் கொடுத்திருந்தார்.

  இந்த விவகாரமான போட்டோஷூட்டுக்கு சிலர் ஆதரவு தெரிவித்தாலும், பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

  “அதெல்லாம் ரொம்ப ஈஸி. அடுத்த மூவில அதையும் பார்க்கலாம்: லெஜெண்ட் அண்ணாச்சியின் அசால்ட் சம்பவங்கள்! “அதெல்லாம் ரொம்ப ஈஸி. அடுத்த மூவில அதையும் பார்க்கலாம்: லெஜெண்ட் அண்ணாச்சியின் அசால்ட் சம்பவங்கள்!

  நிர்வாணமாக போஸ்

  நிர்வாணமாக போஸ்

  நடிப்பை தாண்டி மாடலிங்கில் கவனம் செலுத்தி வரும் ரன்வீர் சிங், வித்தியாசமான ஆடைகள் அணிவது, ஹேர்ஸ்டைல் வைத்துக் கொள்வது என அவ்வப்போது போட்டோஷூட் நடத்துவதையும் வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில், ரன்வீர் பத்திரிகை ஒன்றுக்கு நிர்வாணமாக போஸ் கொடுத்திருந்தார் ரன்பீரின் இந்த நிர்வாண போட்டோஷூட்டிற்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு கிளப்பி ரன்பீர் சிங்கை கண்டபடி திட்டி வருகின்றனர்.

  கடும் எதிர்ப்பு

  கடும் எதிர்ப்பு

  பெங்காலி நடிகையும் அரசியல்வாதியுமான மிமி சக்ரவர்த்தி, ரன்வீர் சிங்கின் புகைப்படங்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சில பதிவுகளை போட்டுள்ளார். அதில், ஒரு பெண் இப்படி புகைப்படத்தை வெளியிட்டு இருந்தால், இந்த சமுதாயம் அதை ஏற்றுக்கொள்ளுமா? இல்லை அந்த பெண்ணுக்குத்தான் இத்தகைய பாராட்டு கிடைக்குமா? என கேட்டிருந்தார்.

  சிக்கலில் ரன்வீர் சிங்

  சிக்கலில் ரன்வீர் சிங்

  ரன்வீர் சிங், நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு, பெண்களின் உணர்வுகளைப் புண்படுத்திவிட்டதாகக் கூறி மும்பை செம்பூர் காவல்நிலையத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனம் அளித்த புகாரின் பேரில், 67A பிரிவின் கீழ் இந்திய தண்டனைச் சட்டம் 292, 293, 354 மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

  காபி வித் கரண் சீசன் 7

  காபி வித் கரண் சீசன் 7

  இந்நிலையில், தயாரிப்பாளரும், இயக்குனருமான கரண் ஜோகர் நடத்தி வரும் காபி வித் கரண் சீசன் 7 என்ற நிகழ்ச்சியில், விஜய் தேவரகொண்டா மற்றும் அனன்யா பாண்டே ஆகியோர் கலந்து கொண்டனர், இதில், ரேபிட்-ஃபயர் சுற்றில் அதிரடியான கேள்விகளை கரண் ஜோகர் கேட்டார். அதில், சர்வதேச பத்திரிக்கைக்கு நிர்வாணமாக போஸ் கொடுப்பீர்களா? என கேட்டார், அதற்கு நிர்வாண போஸ் கொடுக்க நான் தயார் என்றார்.

  லைகர்

  லைகர்

  பூரி ஜெகநாத் இயக்கியுள்ள லைகர் திரைப்படத்தில் விஜய்தேவரகொண்டா குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் ஆகஸ்ட் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பிரபல குத்துச்ண்டை வீரர் மைக் டைசனும் ஒரு கேமியோவில் நடித்துள்ளார். ரம்யா பாண்டியன் அம்மாவாக நடித்துள்ளார்.இந்த படத்தில் ஒரு காட்சியில் விஜய்தேவரகொண்ட நிர்வாண இருந்த புகைப்படம் வெளியாகி சர்ச்சைக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

  English summary
  Koffee With Karan season 7 episode 4: Vijay Deverakonda said during the rapid fire round that he would be willing to pose nude for a photoshoot.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X