Don't Miss!
- News
"பந்தாடறாங்களே" அந்த கட்சியை.. "அடமானம்" வேற வச்சிட்டாங்க.. ஹாட் அதிமுக.. கி.வீரமணி சொல்றது புரியுதா
- Finance
ரூ.10000000000000 இழப்பு.. வெறும் 7நாளில் அதானி சாம்ராஜ்ஜியம் வீழ்ச்சி.. சந்தை மதிப்பு 51% சரிவு..!
- Automobiles
பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு சவால் விடும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை! டாப் 10 பட்டியல் இதோ!
- Sports
டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்புவது எப்போது? ஹர்திக் பாண்டியா பளிச் பதில்..குறையை நிவர்த்தி செய்வாரா
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்க ஒரே நேரத்தில் பலபேரை காதலிக்க வாய்ப்பிருக்காம்... இவங்கள லவ் பண்றவங்க உஷாரா இருங்க!
- Travel
த்ரில்லா ஒரு டூர் போகணும்ன்னு ஆசையா – இந்தியாவின் இந்த கைவிடப்பட்ட இடங்களுக்கு செல்லுங்களேன்!
- Technology
இந்த 5 போனை அடுச்சுக்க ஆளே இல்லை.! ரூ.10,000-ல் டாப் போன்கள் இவை தான்.!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
“பாய்காட்டுக்கு பயப்படுற ஆள் நான் இல்லை”: நெட்டிசன்களை ட்ரோல் செய்த விஜய் தேவரகொண்டா
ஐதராபாத்: விஜய் தேவரகொண்டா நடித்துள்ள 'லைகர்' திரைப்படம் வரும் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
Recommended Video
பூரி ஜெகன்நாத் இயக்கியுள்ள 'லைகர்' படத்தில் விஜய் தேவரகொண்டா பாக்ஸராக நடித்துள்ளார்.
இந்நிலையில், லைகர் திரைப்படம் பாய்காட் செய்யப்படுவது குறித்து விஜய் தேவரகொண்டா துணிச்சலாக பதிலளித்துள்ளார்.

இந்தித் திரைப்படங்கள் புறக்கணிப்பு
கடந்த 3 வருடங்களாக குறிப்பிட்ட திரைப் பிரலங்களும் அவர்கள் நடித்த படங்களும் புறக்கணிக்கப்படுகின்றன. நடிகர்கள் பேசிய ஏதேனும் ஒரு கருத்தை சர்ச்சையாக்கி, அதனை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள், படங்களின் வசூலிலும் பாதிப்பு ஏற்படுத்துகின்றனர். இதனால், கங்கனா ரனாவத், அக்சய் குமார் முதல் தற்போது அமீர்கான் வரை ரொம்பவே பாதிக்கப்பட்டுள்ளனர். அமீர் கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லால் சிங் சத்தா' பாய்காட் பிரச்சினையால், வசூலில் டல் அடித்தது.

பான் இந்தியா படமாக வெளியாகும் லைகர்
தெலுங்கில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி' திரைப்படம் மூலம், முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வரும் விஜய் தேவரகொண்டா, தற்போது ‘லைகர்' படத்தில் நடித்து முடித்துள்ளார். பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்தப் படம், வரும் 25ம் தேதி பான் இந்தியா லேபிளோடு 5 மொழிகளில் வெளியாகிறது. விஜய் தேவரகொண்டாவுடன் அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் ஆகியோர் நடித்துள்ளனர்.

பாய்க்காட்டை விமர்சித்த விஜய் தேவரகொண்டா
இந்நிலையில், விஜய் தேவரகொண்டாவும், அனன்யா பாண்டேவும் ‘லைகர்' படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பிஸியாக இருக்கின்றனர். இந்நிகழ்ச்சிகளில் பாலிவுட் திரைப்படங்கள் பாய்காட் செய்யப்படுவது கருத்து கூறிய விஜய் தேவரகொண்டா, பாய்காட்டை ட்ரோல் செய்யும் நெட்டிசன்களை கடுமையாக விமர்சித்திருந்தார். அனன்யா பாண்டேவும் பாய்காட்டுக்கு எதிராக கருத்துகள் தெரிவித்திருந்தார். மேலும், பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது, எதிரில் இருப்பவர்களை ஒரு பொருட்டாகக் கூட மதிக்காமல், முன்னால் இருந்த டேபிளில் காலை தூக்கி வைத்து திமிராக பதிலளித்தார் விஜய் தேவரகொண்டா.

லைகர் படத்தை பாய்காட் செய்யும் நெட்டிசன்கள்
இதனால் கொதித்துப் போன நெட்டிசன்கள், தற்போது லைகர் படத்தையும் விஜய் தேவரகொண்டாவையும் பாய்காட் செய்து வருகின்றனர். விஜய் தேவரகொண்டா ஆட்டிட்டியூட் காட்டுவதாகவும், அவர் படத்தை புறக்கணிப்பதாகவும் ட்விட்டரில் கருத்துகளை பதிவிட்டு ட்ரோல் செய்தனர். இதனால், ‘லைகர்' படம் வெற்றி பெறுமா இல்லை இந்திப் படங்களைப் போல தோல்வியடையுமா என பெரிய எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

பாய்காட்டுக்கு பயப்படுற ஆள் நான் இல்லை
இந்நிலையில், ‘லைகர்' படம் பாய்காட் செய்யப்படுவது குறித்து விஜய் தேவரகொண்டா மிகத் துணிச்சலாக கருத்துத் தெரிவித்துள்ளார். அதில், "யார் ஒருவரும் முதுகில் இலக்கை சுமந்தபடி ஓடிக் கொண்டிருக்கும் போது, அதில் வெற்றிபெற போராடுவோம். அதற்காக நீங்கள் நேர்மையாகவும் மற்றவர்களுக்கு நல்லதை செய்ய விரும்பினால், மக்களின் அன்பும் கடவுளின் அன்பும் உங்களை பாதுகாக்கும்" என ட்வீட் செய்துள்ளார். இதன்மூலம் நான் பாய்காட்டுக்கெல்லாம் பயப்படமாட்டேன் என தைரியமாக கூறியுள்ளது உறுதியாகிறது.