அவர் படத்தில் நடிப்பதற்கு நீங்கள் கிணற்றில் குதிச்சிடலாம் விஜய்: ரசிகர்கள் கதறல்
ஹைதராபாத்: நடிகை சார்மி வெளியிட்ட அறிவிப்பை பார்த்த விஜய் தேவரகொண்டா ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
விஜய் தேவரகொண்டா நடிப்பில் கடந்த மாதம் வெளியான டியர் காம்ரேட் படத்திற்கு எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் விஜய் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் நடிகை சார்மி தயாரிப்பில் புதுப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் சார்மி தயாரிப்பில் அண்மையில் வெளியான ஐஸ்மார்ட் ஷங்கர் தெலுங்கு படம் சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் தான் பூரி ஜெகன்நாத் படத்தில் நடிக்கப் போகிறார் விஜய்.

சார்மி
விஜய் படம் குறித்து சார்மி வெளியிட்ட அறிவிப்பை பார்த்த ரசிகர்களுக்கு ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு. வேண்டாம் விஜய், பூரி படத்தில் நடிப்பதற்கு நீங்கள் கண்ணை திறந்து கொண்டே கிணற்றில் குதித்துவிடலாம். உங்களின் வழி வேறு, அவரின் வழி வேறு. அவர் படத்தில் நடித்து இமேஜை டேமேஜாக்கிக் கொள்ள வேண்டாம் என்று விஜய் தேவரகொண்டாவுக்கு அவரின் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விஜய் தேவரகொண்டா
ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மேலும் கூறியிருப்பதாவது, ஐஸ்மார்ட் ஷங்கர் படத்தை நீங்கள் இன்னும் பார்க்கவில்லையா?. அந்த பூரி ஜெகன்நாத் மூளையை கழற்றி வைத்துவிட்டு ஐஸ்மார்ட் ஷங்கர் படத்தை இயக்கியுள்ளார். உங்களுக்கு அது போன்ற படங்கள் ஒத்து வராது. இந்த முயற்சிக்கு பின்னால் ஏதோ சதி உள்ளது. உங்களின் கெரியரை நாசமாக்க 'அவர்கள்' பூரி மூலம் செய்த வேலை போன்று உள்ளது. ஏமாந்துவிட வேண்டாம் என்று ரசிகர்கள் எச்சரித்துள்ளனர்.

டியர் காம்ரேட்
விஜய் தேவரகொண்டாவை வைத்து மாஸ் படத்தை இயக்கப் போகிறாராம் பூரி ஜெகன்நாத். விஜய்யின் டியர் காம்ரேட் படத்தை பாலிவுட்டில் ரீமேக் செய்கிறார் பிரபல இந்தி பட இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹார். ரீமேக்கிலும் விஜய்யையே நடிக்குமாறு கேட்டுள்ளார் கரண், ரூ. 40 கோடி சம்பளம் தருவதாக வேறு தெரிவித்துள்ளார். அப்படி இருந்தும் இந்தி ரீமேக்கில் நடிக்க மறுத்துவிட்டார் விஜய்.

பாலிவுட்
விஜய் தேவரகொண்டாவின் அர்ஜுன் ரெட்டி படத்தை இந்தியில் ரீமேக் செய்து ரூ. 260 கோடிக்கு மேல் வசூல் பார்த்துவிட்டார்கள். இதையடுத்து தான் விஜய்யின் டியர் காம்ரேட் பட இந்தி ரீமேக் உரிமையை கரண் ஜோஹார் ரூ. 6 கோடிக்கு வாங்கியுள்ளார். கோடி, கோடியாய் கொட்டிக் கொடுத்தாலும் மும்பையில் தங்கி இந்தி படத்தில் நடிக்க மாட்டேன். மும்பை வாழ்க்கை ஒத்துவராது என்று கறாராக தெரிவித்துவிட்டார் விஜய்.


Click it and Unblock the Notifications











