Samantha: சமந்தாவால் சந்தோஷத்தை இழந்த யங் ஹீரோ.. எப்படி சமாளிக்கப் போறாரோ.. அதுதான் மேட்டரா?

சென்னை: நடிகை சமந்தாவால் இளம் ஹீரோ ஒருவர் தனது சந்தோஷத்தையே இழந்து தவிப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான யசோதா திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் படு தோல்வியை சந்தித்துள்ளது.

Vijay Deverakonda upsets on Samantha due to Shaakuntalam results?

யசோதா படத்திற்கு பிறகு இந்த படமும் மிகப்பெரியளவில் வெற்றியடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த படம் பெரிதாக போகவில்லை. இதனால் நடிகர் விஜய் தேவரகொண்டா தான் அதிக வருத்தத்தில் இருப்பதாக கூறுகின்றனர்.

சமந்தாவுக்கு பெரிய சரிவு: நாக சைதன்யா உடன் விவாகரத்து நடந்தது. மயோசிடிஸ் நோய் பாதிப்பால் உடல் நிலை படு மோசமாக மாறியது என அடுத்தடுத்து சமந்தாவுக்கு தொடர்ந்து இறங்கு முகமாக இருந்து வரும் நிலையில், சமீபத்தில் வெளியான சாகுந்தலம் திரைப்படம் மிகப்பெரிய டிசாஸ்டராக மாறி அவருக்கு மேலும், அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

மீண்டும் ஜோடி: தி ஃபேமிலி மேன் வெப்சீரிஸ் மூலம் சமந்தாவுக்கு கொடுத்த மிகப்பெரிய புகழ் மற்றும் யசோதா படத்தின் வெற்றி காரணமாக சமந்தாவுடன் ஜோடி சேர்ந்து இருந்தார் விஜய் தேவரகொண்டா. ஏற்கனவே நடிகையர் திலகம் படத்திலேயே இருவரும் இணைந்து நடித்து நடித்திருந்தனர். ஆனால், அந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான் தான் ஹைலைட்டாக தெரிந்தனர். இந்நிலையில், சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் இணைந்து குஷி படத்தில் நடித்து வருகின்றனர்.

Vijay Deverakonda upsets on Samantha due to Shaakuntalam results?

சந்தோஷத்தை இழந்த விஜய் தேவரகொண்டா: சமந்தாவுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், ஹீரோயினை மாற்றாமல் அவர் குணமாகி வரும் வரை படக்குழு காத்திருந்த நிலையில், சமந்தா மீண்டும் நலமுடன் திரும்பி வந்த நிலையில், அவசர அவசரமாக அந்த படத்தை எடுத்து முடித்தனர். மேலும், செப்டம்பர் 1ம் தேதி இந்த ஆண்டு குஷி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது விஜய் தேவரகொண்டாவின் சந்தோஷமே சமந்தாவால் போய் விட்டது என்கின்றனர்.

லைகர் தோல்வி: விஜய் தேவரகொண்டா பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே உடன் இணைந்து நடித்த லைகர் திரைப்படம் படு தோல்வியை சந்தித்த நிலையில், அடுத்ததாக சமந்தாவுடன் இணைந்து நடித்துள்ள குஷி படம் நிச்சயம் கம்பேக் படமாக அமையும் என்றும் மிகப்பெரிய கலெக்‌ஷனை கொடுக்கும் என நினைத்து இருந்தார். ஆனால், தற்போது அந்த படத்திற்கு பெரும் பின்னடவு சமந்தாவால் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

Vijay Deverakonda upsets on Samantha due to Shaakuntalam results?

பிசினஸ் அடிபட்டு விட்டது: சமந்தாவின் சாகுந்தலம் திரைப்படத்தை இப்போதைக்கு ரிலீஸ் செய்ய வேண்டாம் என்றும் குஷி படத்தை ரிலீஸ் செய்த பின்னர் வெளியிடலாம் என விஜய் தேவரகொண்டா படத்தின் ரிசல்ட்டை புரிந்து கொண்டு கோரிக்கை விடுத்திருந்தார் என்றும் ஆனால், சமந்தா அந்த படத்தின் மீது பெரும் நம்பிக்கை வைத்து படம் பாகுபலி, பொன்னியின் செல்வன் போல பிக்கப் ஆகும் என நினைத்திருந்தாராம். ஆனால், கடைசியாக விஜய் தேவரகொண்டா நினைத்தது போல படம் படுத்து விட்ட நிலையில், குஷி படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் தற்போது தயக்கம் காட்டுவதாக பரபரப்பு பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

ஹிட் அடித்தால் தான்: சமந்தாவுக்கும் விஜய் தேவரகொண்டாவுக்கும் கம்பேக் கொடுக்குமா குஷி படம் என்கிற எதிர்பார்ப்பும் அந்த படத்தின் மீது அதிகம் எழுந்துள்ள நிலையில், இந்த முறை மிஸ் ஆனால், விஜய் தேவரகொண்டாவுக்குத் தான் அதிக இழப்புகள் ஏற்படும் என்பதால் தான் அவர் தற்போது சமந்தாவால் அப்செட் ஆகி உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X