சமந்தாவுக்கு நோய் வர காரணமே நீங்க தானா.. விஜய் தேவரகொண்டாவிடமே கேட்ட பயில்வான் ரங்கநாதன்!

சென்னை: குஷி படத்தின் ப்ரமோஷனுக்காக சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த விஜய் தேவரகொண்டாவுக்கு தர்ம சங்கடமான நிலையை பயில்வான் ரங்கநாதன் உருவாக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சினிமா பிரபலங்களின் அந்தரங்க விஷயங்கள் குறித்து தொடர்ந்து அத்துமீறி பேசி வரும் பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் விஜய் தேவரகொண்டாவும் சமந்தாவும் ஒரே ஹோட்டலில் ரூம் போட்டு தங்கினர் என்றும் தற்போது இருவரும் தான் காதலித்து வருகின்றனர் என்றெல்லாம் பேசி பரபரப்பை பற்ற வைத்திருந்தார்.

Vijay Deverakonda very upset over Bayilvan Ranganathan stirs Samantha issue on stage

இந்நிலையில், பிரஸ் மீட்டில் விஜய் தேவரகொண்டாவிடமே பயில்வான் ரங்கநாதன் அப்படி கேட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சென்னைக்கு வராத சமந்தா: டோலிவுட்டில் குஷி படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு விஜய் தேவரகொண்டாவுடன் ஸ்டேஜிலேயே அப்படியொரு ரொமான்ஸ் செய்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் குஷி படத்திற்கு வரவழைக்கும் வேலையை கச்சிதமாக செய்து விட்டு அமெரிக்காவுக்கு கிளம்பி விட்டார் சமந்தா.

சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை சமந்தா கலந்து கொள்ளவில்லை. குஷி படத்தின் நாயகன் விஜய் தேவரகொண்டா மட்டுமே பத்திரிகையாளர்களின் கேள்விகளை எதிர்கொண்டு பதில் அளித்தார்.

ரகசிய திருமணம் மட்டுமே: விஜய் தேவரகொண்டாவின் திருமணம் எப்போது என எழுப்பப்பட்ட கேள்விக்கு, கண்டிப்பாக செய்துக் கொள்வேன். ஆனால், உங்க யாருக்குமே அது நிச்சயம் தெரிய வராது.

எனக்கான அழகான ஒரு குடும்பத்தை அமைத்துக் கொள்வேன் என ரகசிய திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக கூறினார் விஜய் தேவரகொண்டா.

Vijay Deverakonda very upset over Bayilvan Ranganathan stirs Samantha issue on stage

பஞ்சர் பண்ண பயில்வான்: குஷி படத்தில் சமந்தா நோய் பாதிப்பு அடைந்த நிலையில், நடித்தாரா? அல்லது அதற்கு முன்னதாக நடித்தாரா என பயில்வான் ரங்கநாதன் கேள்வி எழுப்ப, அதுவரை ஜாலியாக சிரித்துக் கொண்டு பத்திரிகையாளர்கள் கேள்விக்கு பதில் அளித்து வந்த விஜய் தேவரகொண்டா, பயில்வான் கேள்வியால் அப்செட் ஆனார்.

சமந்தா நோயால் பாதிக்கப்படுவதற்கு முன்பாக 60 சதவீதம் படப்பிடிப்பை நடத்தினோம். அவர் அந்த பாதிப்பில் இருந்து சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில் தான் மீண்டும் 40 சதவீத படப்பிடிப்பை நடத்தினோம் என பயில்வான் கேள்விக்கு பதிலளித்தார்.

நீங்க தான் காரணம்: அந்த கேள்விக்கு விஜய் தேவரகொண்டா பதில் அளித்த நிலையில், சமந்தாவுக்கு நோய் வரவே நீங்க தான் காரணம் என பயில்வான் குண்டை தூக்கிப் போட விஜய் தேவரகொண்டாவுக்கு அவர் என்ன சொல்கிறார் என்றே புரியவில்லை. அதற்குள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இந்த நிகழ்ச்சி இத்துடன் முடிந்து விட்டது என அறிவித்து விஜய் தேவரகொண்டாவை அழைத்துச் சென்றனர்.

விஜய் தேவரகொண்டாவின் முகத்துக்கு நேராகவே சமந்தா இப்படியாக நீங்க தான் காரணம் என பயில்வான் ரங்கநாதன் பேசியது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X