நல்லா கஷ்டப்படட்டும்: ஹீரோவாக நடிக்க வந்த தம்பிக்கே உதவி செய்யாத விஜய்

By Siva

ஹைதராபாத்: விஜய் தேவரகொண்டா தனது தம்பி ஆனந்துக்கு உதவி செய்யவில்லை.

விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தொரசானி படம் மூலம் ஹீரோ ஆகியுள்ளார். வரும் வெள்ளிக்கிழமை வெளியாகும் அந்த படத்தில் ஆனந்துக்கு ஜோடியாக நடிகை ஜீவிதா, நடிகர் ராஜசேகர் தம்பதியின் இளைய மகள் ஷிவாத்மிகா நடித்துள்ளார்.

இந்நிலையில் ஹைதராபாத்தில் நடந்த தொரசானி பட விழாவில் சிறப்பு விருந்தினராக விஜய் தேவரகொண்டா கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது,

அமெரிக்கா

அமெரிக்கா

நான் நடிக்க வந்து போராடிக் கொண்டிருந்த நேரத்தில் என் தம்பி ஆனந்த் அமெரிக்காவில் வேலை பார்த்து மாதாமாதம் பணம் அனுப்பி குடும்பத்தை கவனித்துக் கொண்டான். அவன் வேலையை விட்டுவிட்டு இந்தியா வருகிறேன் என்று கூறியது எனக்கு பிடிக்கவில்லை. கஷ்டப்பட்டு கிடைத்த வேலையை விட்டுவிட்டு இங்கு வந்து என்ன செய்வாய் என்று கேட்டேன். அதற்கு உன் ஆடை பிசினஸை பார்த்துக் கொள்வேன் என்றார்.

எச்சரிக்கை

எச்சரிக்கை

எனக்கு சினிமாவில் நடிக்க ஆசையாக உள்ளது என்று ஆனந்த் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். சினிமா உனக்கு வேண்டாம் என்று எச்சரித்தும் அவன் கேட்கவில்லை. என் எச்சரிக்கைகளை மீறி நடிக்க வந்தால் நான் எந்த உதவியும் செய்ய மாட்டேன் என்றேன். கதையை தேர்வு செய்வதில் இருந்து அனைத்து விஷயத்தையும் அவன் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதால் அவனுக்கு நான் உதவி செய்யவில்லை. எனக்கு சினிமாவில் நடிக்க ஆசையாக உள்ளது என்று ஆனந்த் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். சினிமா உனக்கு வேண்டாம் என்று எச்சரித்தும் அவன் கேட்கவில்லை. என் எச்சரிக்கைகளை மீறி நடிக்க வந்தால் நான் எந்த உதவியும் செய்ய மாட்டேன் என்றேன். கதையை தேர்வு செய்வதில் இருந்து அனைத்து விஷயத்தையும் அவன் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதால் அவனுக்கு நான் உதவி செய்யவில்லை.

ஆனந்த்

ஆனந்த்

நான் டியர் காம்ரேட் படத்தில் பிசியாக இருந்ததால் தொரசானி படம் பற்றி நாங்கள் பேசவே இல்லை. நான் இன்று இந்த நிலைமைக்கு வந்ததற்கு காரணமே என் தம்பி ஆனந்த் தான். அவன் சம்பாதித்து குடும்பத்தை கவனித்துக் கொண்டதால் என்னால் படங்களில் கவனம் செலுத்த முடிந்தது என்று கூறி கண் கலங்கினார் விஜய் தேவரகொண்டா.

விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா

தொரசானி படத்தின் பூஜைக்கு விஜய் தேவரகொண்டா வரவில்லை. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் தொரசானி குறித்து எதுவுமே தெரிவிக்கவில்லை. தம்பி போராடி முன்னுக்கு வந்தால் தான் அந்த வெற்றி நிலைத்து நிற்கும் என்பதால் எந்த ஒரு உதவியும் செய்யாமல் இருக்கிறாராம். நான் நடிக்க வருகிறேன் என்று கூறியதும் அண்ணன் விஜய் என்னுடன் பேசுவதை நிறுத்திவிட்டார். சில நாட்கள் கழித்தே பேசினார் என்கிறார் ஆனந்த்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X