இந்தி ஹீரோயின்கள் கியாரா, ஜான்வி கபூர்.. இவங்களோட நடிக்கணும்.. இப்படியொரு ஆசையில் அந்த இளம் ஹீரோ!
ஐதராபாத்: கியாரா அத்வானி, ஜான்வி கபூர் ஆகியோருடன் நடிக்கும் ஆசை இருப்பதாக பிரபல ஹீரோ தெரிவித்துள்ளர்.
சினிமாவுக்கு வந்து 9 வருடங்கள் ஆகிவிட்டது விஜய் தேவரகொண்டாவுக்கு. இதுவரை 15 படங்கள் நடித்திருக்கிறார்.
தமிழில், நடிகையர் திலகம், நோட்டோ, டியர் காம்ரேட் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.

கதையில் தலையீடு
அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் பிரபலமான இவர், கடைசியாக வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் தமிழிலும் அதே பெயரில் டப் ஆகி ரிலீஸ் ஆனது. இதில் அதில் 4 ஹீரோயின்கள் நடித்திருந்தனர். இந்த படம் சரியாக ஓடவில்லை. அதற்கு விஜய் தேவரகொண்டா கதையில் தலையிட்டதுதான் காரணம் என்று கூறப்பட்டது.

இந்தி, தெலுங்கு, தமிழ்
விஜய் தேவரகொண்டா இப்போது புரி ஜெகநாத் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதற்கு ஃபைட்டர் என்று தற்காலிகமாக டைட்டில் வைத்துள்ளனர். இதை நடிகை சார்மியும் புரி ஜெகநாத்தும் இணைந்து தயாரிக்கின்றனர். இந்தப் படம் இந்தி, தெலுங்கு மற்றும் தமிழிலும் உருவாகிறது. இந்தியில் கரண் ஜோஹர், ஆபூர்வா மேத்தா தயாரிக்கின்றனர்.

அனன்யா பாண்டே
இதில் அனன்யா பாண்டே ஹீரோயினாக நடிக்கிறார். இவர், இந்தி நடிகர் சங்கி பாண்டேவின் மகள். இதில் பாக்சராக விஜய் தேவரகொண்டா நடிப்பதாகக் கூறப்படுகிறது. ரம்யா கிருஷ்ணன் அவர் அம்மாவாக நடிக்கிறார். இந்நிலையில் விஜய் தேவரகொண்டாவும் நடிகை அனன்யா பாண்டேவும் காதலித்து வருவதாகச் செய்திகள் வெளியாயின. இந்நிலையில் கியாரா அத்வானி, ஜான்வி கபூர் ஆகியோருடன் நடிக்க விரும்புவதாக விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார்.

ஜான்வி கபூர்
விஜய்யும் கியாராவும் விளம்பர படம் ஒன்றில் இணைந்து நடித்திருந்தனர். ஜான்வி கபூர், அர்ஜுன் ரெட்டியில். விஜய்யின் நடிப்பு சிறப்பாக இருந்ததாகப் பாராட்டி இருந்தார். இப்போது நடிக்கும் பைட்டர் படத்தில் ஜான்வி கபூர்தான் முதலில் ஹீரோயினாக நடிப்பதாக இருந்தது. சம்பள விவகாரம் தொடர்பாக அவர் படத்தில் இருந்து விலகியதாகக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











