யுவனுடன் இணைந்து பணியாற்ற விருப்பம்...இப்படி சொல்றது யாரு தெரியுமா?

சென்னை : அர்ஜுன் ரெட்டி என்ற படத்தின் மூலம் இந்தியா முழுவதும் அறிமுகமன நடிகர் விஜய் தேவரகொண்டா.இந்த படத்திற்கு பின்னர் இவருக்கு இருக்கும் பெண் ரசிகைகள் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் இருந்தது.

Recommended Video

Liger Movie Review | Yessa ? Bussa ? | |Vijay Deverakonda|Ananya Panday|Ramya Krishna|Puri Jagannadh

அர்ஜுன் ரெட்டி படத்திற்கு முன் பல படங்களில் நடித்தாலும், அர்ஜுன் ரெட்டி படம் தான் விஜய் தேவரகொண்டாவை பிரபலப்படுத்தியது. அதற்கு பிறகு நடித்த மகாநடி, கீதா கோவிந்தம், நோட்டா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

Vijay Deverakonda wishes to work with Yuvan Shankar Raja soon

ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக இவர் நடித்த எந்த படமும் சரியாக போகவில்லை. இந்த சமயத்தில் கடந்த 2 ஆண்டுகளாக லைகர் என்ற படத்திற்கு மிகத் தீவிரமாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் லைகர் படம் இன்று வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இருப்பினும் லைகர் படத்தில் விஜய்யின் நடிப்பையும், உழைப்பையும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். பலவீனமான திரைக்கதையால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம் ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.இந்நிலையில், யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக விஜய் தேவரகொண்டா விருப்பம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக லைகர் படம் வெற்றி பெறுவதற்கு யுவன் சங்கர் ராஜா வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த விஜய் தேவரகொண்டா விரைவில் யுவனுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக கூறியுள்ளார்.தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் லைகர் படம் வெளியாகியுள்ளது. தமிழில் போதிய வரவேற்பு கிடைக்காவிட்டாலும், தெலுங்கு வட்டாரத்தில் லைகர் படம் ஓரளவு வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படத்தை இயக்குனர் புரி ஜெகன்னாத், பாலிவுட் தயாரிப்பாளர் இயக்குனர் கரண் ஜோகர், நடிகை சார்மி உள்ளிட்டோர் இணைந்து தயாரித்துள்ளனர். லைகர் படத்தில் சிறப்பு தோற்றத்தில் முன்னாள் குத்துச் சண்டை உலக சாம்பியன் மைக் டைசன் இடம்பெற்றுள்ளார்.

விஜய் தேவரகொண்டா தற்போது குஷி, ஜன கன மன போன்ற படங்களில் நடித்து வருகிறார். குஷி படத்தில் சமந்தாவுடன் விஜய் தேவரகொண்டாவுடன் இவர் இணைந்து நடித்து வருவதால் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. மற்றொரு புறம் விஜய் தேவரகொண்டா, நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு இடையே காதல், டேட்டிங் ஆகியன கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X