2 வருஷத்திற்கு விஜய் என்னுடன் நடிக்க மாட்டார், நான் செய்த காரியம் அப்படி: ரஷ்மிகா

By Siva

ஹைதராபாத்: குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு விஜய் தேவரகொண்டா என்னுடன் சேர்ந்து நடிக்க மாட்டார் என நடிகை ரஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.

தெலுங்கு ரசிகர்கள் கொண்டாடும் ரீல் ஜோடி விஜய் தேவரகொண்டா, ரஷ்மிகா மந்தனா. அவர்கள் கீத கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய இரண்டு படங்களில் சேர்ந்து நடித்துள்ளனர்.

Vijay Deverakonda wont act with me again for two years: Rashmika

கீத கோவிந்தம் படத்தில் நடித்த போது விஜய்யுடன் ஏற்பட்ட நெருக்கத்தால் தான் ரஷ்மிகா தனது திருமணத்தை நிறுத்தினார் என்று கூட கூறப்பட்டது. விஜய்யும், ரஷ்மிகாவும் காதலிப்பதாக பல காலமாக பேசப்படுகிறது.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார் ரஷ்மிகா. பார்க்க நல்ல ஜோடியாக இருக்கிறீர்களே, நீங்கள் ஏன் நிஜ வாழ்க்கையிலும் காதலிக்கக் கூடாது என்று ரசிகர்கள் கேட்டனர். அதற்கு ரஷ்மிகா கூறியதாவது,

சும்மா உட்கார்ந்து பேசி, காதலிப்பதை விட எங்களுக்கு பல வேலை உள்ளது. வேலை மூலம் நாங்கள் அன்பையும், மரியாதையையும் வெளிப்படுத்துகிறோம். நான் அவரை செமயாக எரிச்சலூட்டியுள்ளேன். அதனால் குறைந்தது 2 ஆண்டுகளுக்காவது என்னுடன் சேர்ந்து எந்த படத்திலும் நடிக்க மாட்டார் என்று தெரிவித்துள்ளார்.

ரஷ்மிகா கார்த்தியின் சுல்தான் படம் மூலம் கோலிவுட் வந்துள்ளார். பாக்யராஜ் கண்ணன் இயக்கி வரும் சுல்தான் படத்தின் தலைப்பை படக்குழு வெளியிடும் முன்பு ரஷ்மிகா சமூக வலைதளத்தில் உளறிவிட்டார். இதனால் படக்குழு அவர் மீது கடுப்பில் உள்ளது.

இதற்கிடையே விஜய் தேவரகொண்டாவை டியர் காம்ரேட் படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹார் அழைத்தார். ரூ. 40 கோடி சம்பளம் தருகிறேன் என்று அவர் தெரிவித்தும் விஜய் நடிக்க மறுத்துவிட்டார். விஜய் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ஃபைட்டர் படத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்தை நடிகை சார்மி, பூரி ஜெகன்நாத்துடன் சேர்ந்து தயாரிக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X