Family Star Box Office: முதல் நாளில் வசூலில் தேறியதா விஜய் தேவரகொண்டா படம்?.. ஃபேமிலி ஸ்டார் வசூல்?
சென்னை: இயக்குநர் பரசுராம் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாகூர் நடிப்பில் வெளியான ஃபேமிலி ஸ்டார் திரைப்படத்துக்கு கலவையான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில், அந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. எப்படியாவது பிளாக்பஸ்டர் படத்தை கொடுத்து தனது சம்பளத்தை அதிகரித்து விட வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கும் விஜய் தேவரகொண்டாவுக்கு தொடர்ந்து தோல்வி படங்களே அமைந்து வருகிறது.

விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாகூர், ஜகபதி பாபு, வெண்ணிலா கிஷோர், ரோகிணி உள்ளிட்ட பலர் நடித்துள்ள ஃபேமிலி ஸ்டார் திரைப்படம் ஏப்ரல் 5ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
நல்ல பட்ஜெட்டில்: விஜய் தேவரகொண்டா படங்கள் பார்க்க அப்படியே பாலிவுட் படங்கள் போல உருவாகி வந்தாலும், அந்தப் படங்களின் எந்த ஒரு உயிரோட்டமும் இல்லாமல் திரைக்கதை டல் அடித்து காணப்படுவதால் ரசிகர்கள் தியேட்டருக்கு வந்து விஜய் தேவரகொண்டா படங்களைப் பார்ப்பதை தவிர்த்து வருகின்றனர்.
மிருணாள் தாகூரும் காலி: விஜய் தேவரகொண்டா வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் படத்தில் ராஷி கன்னா, ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஃபிளாப் கொடுத்தார். லைகர் படத்தில் அனன்யா பாண்டே அவுட் ஆனார். கடந்த ஆண்டு சமந்தாவை சறுக்க வைத்த விஜய் தேவரகொண்டா ஃபேமிலி ஸ்டார் படத்தின் மூலம் மிருணாள் தாகூரையும் முடிச்சி விட்டார் என மீம்கள் பறக்கின்றன.

முதல் நாள் வசூல்: விஜய் தேவரகொண்டா படங்களுக்கு கடுமையான விமர்சனங்கள் குவிந்தாலும் வசூல் ரீதியாக முதல் நாள் நல்ல ஓப்பனிங் கிடைத்து வருகிறது. மீண்டும் கீதா கோவிந்தம் இயக்குநருடன் விஜய் தேவரகொண்டா இணைந்த நிலையில் ஃபேமிலி ஸ்டார் திரைப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவுக்கு எதிர்பார்ப்பு இருந்தது. அதன் பலனாக முதல் நாளில் 5.75 கோடி ரூபாய் வசூலை விஜய் தேவரகொண்டாவின் ஃபேமிலி ஸ்டார் திரைப்படம் இந்திய அளவில் ஈட்டியுள்ளது.
முதல் வாரம் கல்லா கட்டுமா?: முதல் நாளில் படத்துக்கு எதிராக குவிந்த நெகட்டிவ் விமர்சனங்கள் படத்தின் டிக்கெட் புக்கிங்கில் பெரிதாக சிக்கலை உருவாக்கி இருப்பதாக கூறுகின்றனர். சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் படத்திற்கு வரும் வசூல் தான் இந்த படத்தின் பாக்ஸ் ஆபிஸ் என்றும் வார நாட்கள் மற்றும் 2வது வாரத்தில் எல்லாம் இந்த படம் தாக்குப்பிடித்து கல்லா கட்டுமா? என்பது சந்தேகம் தான் எனக் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











