சமந்தாவும் வேண்டாம்.. ராஷ்மிகாவும் வேண்டாம்.. விஜய் தேவரகொண்டாவின் புது ரூட்.. கிங்டம் வெல்லுமா?

சென்னை: விஜய் தேவரகொண்டா நடித்தாலே கலர்ஃபுல்லாக பல ஹீரோயின்களுடன் டூயட் பாடுவது, லிப் லாக் அடிப்பது என்று தான் படங்கள் இருக்கும். 2018ம் ஆண்டு ராஷ்மிகா மந்தனாவுடன் இணைந்து அவர் நடித்த கீத கோவிந்தம் படத்திற்கு பிறகு பெரிய வெற்றிப் படங்கள் எதுவுமே அவருக்கு பல ஆண்டுகளாக அமையவில்லை.

டியர் காம்ரேட், வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர், லைகர், குஷி, தி ஃபேமிலி ஸ்டார் என பல படங்களிலும் ஹீரோயின்களுடன் டூயட் பாடி ரொமான்ஸ் செய்து நடித்தும் அவருக்கு எதுவுமே வொர்க்கவுட் ஆகவில்லை. கல்கி 2898 ஏடி படத்தில் அர்ஜுனனாக கேமியோ வந்த அவருக்கு கிடைத்த ரெஸ்பான்ஸ் அவர் ஹீரோவாக நடிக்கும் படங்களில் சுத்தமாக கிடைக்காமல் போனது ஏன் என அலசி ஆராய்ந்த விஜய் தேவரகொண்டா தற்போது புது ரூட்டை எடுத்துள்ளார்.

Vijay Deverakonda Kingdom Rashmika Mandanna

கெளதம் தின்னனுரி இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள தனது புதிய படமான கிங்டம் படத்தின் அட்டகாசமான டீசரை தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் தற்போது வெளியிட்டுள்ளார். சிக்ஸ் பேக் உடம்புடன் முரட்டுத்தனமாக இருக்கும் விஜய் தேவரகொண்டாவை பார்த்த ரசிகர்கள் லைகர் படத்தில் இப்படி இருந்திருந்தால் அந்த படம் வெற்றி பெற்றிருக்கும் என்கின்றனர்.

சமந்தாவும் வேண்டாம் ராஷ்மிகாவும் வேண்டாம்: அனன்யா பாண்டேவுடன் லைகர், சமந்தாவுடன் குஷி, மிருணாள் தாகூர் உடன் ஃபேமிலி ஸ்டார் என வரிசையாக விஜய் தேவரகொண்டா நடித்த படங்கள் ஃப்ளாப்பான நிலையில், தற்போது எந்தவொரு ஹீரோயினும் இல்லாமல் தன்னை மட்டுமே படத்தின் கதையை மட்டுமே முழுமையாக நம்பி விஜய் தேவரகொண்டா நடித்துள்ள கிங்டம் படத்தின் டீசர் இன்று வெளியானது.

கிங்டம் டீசர் எப்படி இருக்கு?: போலீஸ் அதிகாரியாக கட்டுமஸ்த்தான உடம்புடன் விஜய் தேவரகொண்டா ஷீல்ட்டை பிடித்துக் கொண்டு துப்பாக்கி குண்டுகளில் இருந்து தப்பிக்கும் காட்சியே வெறித்தனமாக உள்ளது. மேலும், சிறைச்சாலையில் கைதிகளுடன் கைதியாக நின்று கர்ஜிக்கும் காட்சியும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. மருந்துக்கு கூட காஸ்டிங்கிலும் எந்தவொரு நடிகையின் பெயரையும் போடாமல் உள்ளனர். இந்த படத்தில் அவருக்கு ஹீரோயினே கிடையாதா? என்கிற கேள்வியைத் தான் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். அர்ஜுன் ரெட்டி படத்திற்கு பிறகு விஜய் தேவரகொண்டாவுக்கு இந்த படம் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வெற்றிப் படமாக அமையும் என டீசரை பார்த்த பலரும் பாராட்டி வருகின்றனர்.

விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் எப்போ வருது?: வரும் மே 30ம் தேதி உலகம் முழுவதும் தனது புதிய கிங்டத்தை அறிமுகப்படுத்த காத்துக் கொண்டிருக்கிறார் விஜய் தேவரகொண்டா. நல்ல கதைகளை தொடர்ந்து தேர்வு செய்து நடித்தால் இவரை அடித்துக் கொள்ள ஆள் டோலிவுட்டில் இல்லை என இவரது ரசிகர்கள் உற்சாகமூட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X