Kingdom Box Office: முதல் நாள் தியேட்டருக்குப்போய் ஏமாந்துப்போன ரசிகர்கள்.. அதிரடியாக குறைந்த கிங்டம் வசூல்!
ஹைதராபாத்: கெளதம் தின்னனூரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, பாக்யஸ்ரீ போர்ஸ், சத்யதேவ் நடிப்பில் வெளியான கிங்டம் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். மிகப்பெரிய அளவில் ப்ரோமோஷன்கள் இந்த படத்துக்கு செய்யப்பட்டன. டீசர், டிரைலரை எல்லாம் பார்த்துவிட்டு விஜய் தேவரகொண்டாவுக்கு ஒரு கேஜிஎஃப் ஆக இந்த படம் இருக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு கடைசியில் இன்னொரு ரெட்ரோவாக அமைந்து விட்டது என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
விஜய் தேவரகொண்டா ரொமான்ஸில் இருந்து ஆக்ஷன் ஹீரோவாக மாறினார். ஆனால், அவருக்கு அது கைகொடுக்கவில்லை. மீண்டும் ரொமான்டிக் ஹீரோவாக மாறி சமந்தா, மிருணாள் தாகூர் என ரொமான்ஸ் செய்தும் படங்கள் ஓடவில்லை.

இந்நிலையில், மீண்டும் ஆக்ஷன் மோடுக்கு மாறவேண்டும் என கிங்டம் படத்தின் கதையை தேர்வு செய்து கடுமையான உழைப்பைக் கொட்டி நடித்தும் இயக்குநர் செய்த சொதப்பல் காரணமாக படம் ரசிகர்களை கவரவில்லை.
சூர்யாவுக்கு நன்றி: விஜய் தேவரகொண்டா சென்னையில் வந்து படத்தை ப்ரோமோட் செய்தபோது நடிகர் சூர்யாவுக்கு நன்றி தெரிவித்தார். இந்த படத்தின் தமிழ் டீசருக்கு அவர் தான் குரல் கொடுத்திருந்தார். படம் வெளியான பிறகு ரெட்ரோ கதையை சுட்டே இன்னொரு படத்தை எடுத்ததற்காகத்தான் சூர்யாவுக்கு விஜய் தேவரகொண்டா நன்றி தெரிவித்துள்ளார் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
ஓபனிங் வசூலும் வெற்றிக் கொண்டாட்டமும்: முதல் நாள் ஓபனிங் வசூலாக இந்த படத்துக்கு தெலுங்கில் 17.25 கோடி ரூபாயும் தமிழில் 75 லட்சமும் கிடைத்தது. ஒட்டுமொத்தமாக 18 கோடி வசூல் எனும் பிரம்மாண்ட ஓபனிங் காரணமாக படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து விட்டதாக விஜய் தேவரகொண்டா நேற்றே வெற்றி விழாவை கொண்டாடி விட்டார். ஆனால், 2வது நாளான வெள்ளிக்கிழமை வசூல் அப்படியே அதிரடியாக குறைந்து விட்டது. ஆனால், தயாரிப்பு தயாரிப்பு அதிகாரப்பூர்வமாக முதல் நாளில் மட்டுமே கிங்டம் வசூல் 39 கோடி வசூல் செய்துள்ளதாக போஸ்டர் வெளியிட்டுள்ளனர். கேம் சேஞ்சர் படத்தின் போஸ்டர் போல இங்கேயும் கோல்மால் நடந்திருக்கிறதா என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
2வது நாளில் குறைந்த வசூல்: அனிருத் இசையில் விஜய் தேவரகொண்டா நடித்த கிங்டம் திரைப்படத்தின் 2ம் பாகம் எல்லாம் உருவாகும் என்றும் விஜய் தேவரகொண்டா அறிவித்த நிலையில், வெள்ளிக்கிழமையான நேற்று படத்தின் வசூல் அதிரடியாக குறைந்து வெறும் 7.50 கோடி மட்டுமே வசூல் வந்திருப்பதாக Sacnilk வெப்சைட் தகவல் தெரிவித்துள்ளது. இதுவரை 25.50 கோடி வசூலை கிங்டம் படம் கடந்துள்ளதாக கூறுகின்றனர்.
வீக்கெண்ட் எப்படி இருக்கும்?: கிங்டம் படத்தின் முதல் பாதி சூப்பர் என்றும் 2ம் பாதி ரொம்ப மோசம் என விமர்சனங்கள் கிளம்பிய நிலையில், டோலிவுட் ரசிகர்களே விஜய் தேவரகொண்டா படத்தை தியேட்டருக்குச் சென்று பார்ப்பதில் அதிக ஆர்வத்தை செலுத்தவில்லை என்கின்றனர். சனிக்கிழமையான இன்றும் டிக்கெட் புக்கிங் ரொம்பவே டல் அடித்து தான் காணப்படுகின்றன. இன்று மாலை மற்றும் இரவு காட்சிகள், மற்றும் ஞாயிற்றுக்கிழமையான நாளை மக்கள் கூட்டம் திரையரங்குகளை நோக்கி படையெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வசூலை அள்ளும் நரசிம்மா: ஹோம்பலே நிறுவனம் தயாரித்த நரசிம்மா அனிமேஷன் திரைப்படம் இதுவரை 57 கோடிக்கும் அதிகமான வசூலை அள்ளி டோலிவுட் திரையுலகையே மிரள வைத்துள்ளது. கண்ணப்பா படத்துக்கு கூட இந்த அளவுக்கு வசூல் வரவில்லை என்றும் மகாவதார் நரசிம்மா திரைப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கவர்ந்துள்ளதாகவும் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.


Click it and Unblock the Notifications











