Vijay: ஜனநாயகன் டப்பிங்கை இன்னும் முடிக்காமல் இருக்கும் விஜய்.. காரணம் என்ன தெரியுமா?
சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் அடுத்து என்பதைக் காட்டிலும், கடைசியாக வெளியாகவுள்ள படம் ஜனநாயகன். இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தின் புரோமோசன் வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தில் நடிகர் விஜய் இன்னும் டப்பிங் செய்து கொடுக்காமல் இருக்கிறாராம். அதற்கு காரணம் என்று பிரபலம் பிஸ்மி தெரிவித்துள்ள காரணம் பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
நடிகர் விஜய்யின் 69 வது படம் ஜனநாயகன். இந்த படத்தை ஹெச். வினோத் இயக்குகிறார். படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்து, போஸ்ட் புரெடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படி இருக்கும்போது படத்தின் டப்பிங் பணிகள் இன்னும் முடிக்கப்படாமல் உள்ளது. படக்குழு தரப்பில் ஒரு பாடல் இடம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஜன நாயகன் படம் தெலுங்கில் பாலய்யா நடிப்பில் வெளியான பகவந்த் கேசரி படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக் என்று கூறப்படுகிறது. படத்தில் விஜய் உடன் பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. குறிப்பாக பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். படத்திற்கு அனிருத் இசை அமைத்து வருகிறார்.
235 கோடிகளா?: இந்நிலையில் படத்தின் டப்பிங் பணிகள் குறித்து, குறிப்பாக நடிகர் விஜய் இன்னும் படத்திற்கு டப்பிங் பணிகளை முடித்துக் கொடுக்கவில்லை என்று வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வலைப்பேச்சு யூடியூப் சேனலில் பேசும்போது, " ஜன நாயகன் படத்தின் தியேட்டரிக்கல் உரிமம் இன்னும் விற்பனை ஆகவில்லை. இதை வாங்க பலரும் போட்டி போட்டு வருகிறார்கள். இது மட்டும் இல்லாமல், இந்த படத்தில் விஜய்யின் சம்பளம் ரூபாய் 235 கோடிகள். இப்படி இருக்கும்போது, விஜய்க்கு இதுவரை ரூபாய் 150 கோடிகள் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள ரூபாய் 85 கோடிகளை கே.வி.என் நிறுவனம் வழங்கினால்தான் விஜய் டப்பிங் பேசிக் கொடுப்பார்.

சம்பள பாக்கி - டப்பிங்: தமிழ்நாடு தியேட்டரிக்கல் உரிமம் விற்பனையானால் படக்குழுவினருக்கு பெரிய அளவில் தொகை கிடைக்கும். அதை வைத்து விஜய்க்கு செட்டில் செய்துவிடலாம் என்று கே.வி.என் நிறுவனம் கணக்கிட்டு இருப்பதாக கூறுகிறார். அவர் பகிர்ந்துள்ள தகவல் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது. இந்த செட்டில்மெண்ட்கள் எல்லாம் விரைவில் முடிந்து விடும், அப்படி இருக்கும்போது, படத்தின் டப்பிங் வேலைகள் இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் விஜய் பேசிக் கொடுத்துவிடுவார் என்று கூறப்படுகிறது. இந்த படத்திற்குப் பிறகு, விஜய் முழு நேர அரசியலில் கவனம் செலுத்தப் போகிறார் என்று ஏற்கனவே அவர் தெரிவித்திருந்தார். ரசிகர்கள் இவரது கடைசி படமான ஜன நாயகன் படத்தைப் பார்க்க ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











