என்னது மாஸ்டர் படத்தின் அந்த காட்சியை விஜய் இயக்கினாரா? இது நம்ம லிஸ்ட்லையே இல்லையே!

சென்னை: மாஸ்டர் படத்தில் ஒரு முக்கியமான காட்சியை நடிகர் விஜய் இயக்கி உள்ளதாக தகவல்கள் கசிந்து வருகின்றன.

Recommended Video

கத்தி முதல் மாஸ்டர் வரை | MATHEW VARGHESE INTERVIEW | V-CONNECT | FILMIBEAT TAMIL

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடிப்பில் மாஸ்டர் படம் உருவாகி வருகிறது.

மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது வரும் என காத்திருந்த ரசிகர்களுக்கு, தற்போது, இப்படி ஒரு இன்பதிர்ச்சி தரும் தகவல் வைரலாகி வருகிறது.

மாஸ்டர் டப்பிங்

மாஸ்டர் டப்பிங்

மாஸ்டர் படத்தின் டப்பிங்கை நடிகர் விஜய் கடந்த மார்ச் 4ம் தேதியே முடித்து விட்டாராம். மாஸ்டர் படத்தின் குட்டி ஸ்டோரி பாடல் வெளியாகி டிக் டாக்கில் 200 மில்லியன் பார்வைகளையும், யூடியூபில் 20 மில்லியன் பார்வைகளையும் கடந்து பல சாதனைகளை நாள் தோறும் செய்து வருகிறது.

இசை வெளியீடு

இசை வெளியீடு

மாஸ்டர் படத்தின் செகண்ட் சிங்கிள் இசை வெளியீட்டு விழாவுக்கு முன்னதாக வெளியாகாது என்றும், வரும் மார்ச் 15ம் தேதி சென்னையில் உள்ள லீலா பேலஸில் நடைபெற உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. ஆனால், இதுவரை மாஸ்டர் படக்குழு இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.

அனுமதி இல்லை

அனுமதி இல்லை

மேலும், மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்றும், பிகில் இசை வெளியீட்டு விழாவின் போது, போலி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு, பல விஜய் ரசிகர்களுக்கு தடியடி நடத்தப்பட்ட சம்பவத்தை மனதில் வைத்தே இப்படியொரு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

விஜய் இயக்கம்

விஜய் இயக்கம்

எல்லாத்துக்கும் மேலாக, மாஸ்டர் படத்தில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஆடை பட இயக்குநர் ரத்னகுமார் கேமியோ ரோலில் வருகின்றனர் என்றும், அந்த காட்சியை தளபதி விஜய் தான் இயக்கி உள்ளார் என்ற புதிய தகவல், சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகின்றன.

துப்பாக்கி படத்தில்

துப்பாக்கி படத்தில்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியான துப்பாக்கி படத்தின் கிளைமேக்ஸில் வரும் சில காட்சிகளை, நடிகர் விஜய், தனது கைகளில் கேமராவை கட்டிக் கொண்டு தானே ஷூட் செய்த சம்பவங்கள் நடந்துள்ளன. இந்நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல் விஜய் ரசிகர்களை மேலும், உற்சாகப்படுத்தியுள்ளது.

ஆனால்

ஆனால்

மாஸ்டர் படத்தின் அந்த குறிப்பிட்ட காட்சியை நடிகர் விஜய் இயக்கி உள்ளார் என்ற தகவல் வைரலாகி வந்தாலும், அப்படி ஏதும் நடக்கவில்லை என்றும், அந்த காட்சியை நடிகர் விஜய் இயக்கவில்லை என்றும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது முற்றிலும் வதந்தியா? அல்லது உண்மையா? என்பது இசை வெளியீட்டு விழாவின் போது தெரியவரும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X