சேகர்பாபு அழுத வீடியோவை பகிர்ந்த விஜய் பட இயக்குநர்.. TVK வென்றதிலிருந்து உற்சாகத்தில் மிதக்குறாரே

சென்னை: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் மற்றும் அவரது கட்சி வேட்பாளர்கள் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில், 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். விஜய் இதில் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளார். தேர்தல் காலத்தில் இருந்தே விஜய்க்கு ஆதரவாக தொடர்ந்து பதிவுகளை பகிர்ந்து வந்த இயக்குநர் ஜான் மகேந்திரன், தேர்தல் முடிவுக்குப் பின்னர், இணையத்தில் சுழன்று கொண்டு செயலாற்றும் தவெக கட்சிக்காரரைப் போல பதிவுகளை அடுக்கி வருகிறார்.

தேர்தல் முடிவு நாளில் இருந்து, வாழ்த்துகள் விஜய் என்று தொடங்கிய இவரது பதிவு மிகவும் சாதாரணமாகத்தான் இருந்தது. அதன் பின்னர் விஜய்க்கு வாழ்த்து கூறிய பல திரைப்பிரபலங்களில் போஸ்ட்டை ரீ போஸ்ட் செய்தார். மேலும், விஜய்க்கு ஆதரவாக இணையத்தில் கவனம் ஈர்த்த வீடியோக்கள் பலவற்றையும் தனது எக்ஸ் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் என அவர்கள் இருவரையும் இணையத்தில் மிகவும் பங்கமாக கலாயத்த வீடியோக்கள் பலவற்றையும் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

Vijay Director John Mahendran Shares Sekarbabu Crying Video After TVK Victory Sparks Online Buzz

விஜய் வீடியோக்கள்: அதேபோல் விஜய் தேர்தலுக்கு முன்னர் தனது கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து நடத்திய கூட்டத்தில் பேசுகையில், தேர்தலில் தோல்விக்குப் பின்னர் மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கின்றோம் என்று அறிக்கை வெளியிட்டுவிட்டு, அறிவாலயத்துக்குள் சென்று ஒளிந்து கொள்வீர்கள் அல்லவா, அதை இப்போதே தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறி இருந்தார். அந்த வீடியோவைப் பகிர்ந்த இணைய வாசி ஒருவர், இது எல்லாம் என்ன மாதிரி செய்கை அண்ணா என்று பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவையும் ஜான் மகேந்திரன் பதிவிட்டுள்ளார்.

Vijay Director John Mahendran Shares Sekarbabu Crying Video After TVK Victory Sparks Online Buzz

சேகர் பாபு வீடியோ: இப்படி இருக்கையில், தோல்விக்குப் பிறகு, கொளத்தூர் தொகுதி மக்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவிக்கச் சென்றார். அப்போது, அவருடன் சென்ற அமைச்சரும் திமுக மாவட்டச் செயலாளருமான சேகர்பாபு அழுது கொண்டே இருந்தார். அதேபோல் தேர்தலுக்கு முன்னர் விஜய் என்றால் யாருக்குத் தெரியும், வீதியில் இறங்கி நடந்து வந்தால் எத்தனை பேர் உடன் செல்வார்கள் என்று எல்லாம் சிரித்துக் கொண்டே பேசினார். இந்த இரண்டு வீடியோக்களையும் ஜான் மகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஜான் மகேந்திரன் விஜய்யின் சச்சின் படத்தை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X