முதலமைச்சரானதும் முதல்முறை.. கோட் சூட்டிலிருந்து வேட்டி சட்டைக்கு மாறிய விஜய்.. என்ன காரணம்?

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்று பணிகளை செய்துவரும் விஜய்; இத்தனை நாட்களாக கோட் சூட் மட்டுமே அணிந்திருந்தார். இத்தனை வருடங்களில் தமிழ்நாடு அரசியலில் ஒரு சி.எம் கோட் சூட் போடுவது இதுவே முதன்முறை. இந்நிலையில் முதலமைச்சராக பதவியேற்ற இத்தனை நாட்களில் முதல்முறையாக கோட் சூட்டிலிருந்து மாறி வேட்டி சட்டை அணிந்திருக்கிறார் விஜய். அதுதொடர்பான வீடியோ சோஷியல் மீடியாவில் சென்சேஷனல் ஆகியிருக்கிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வென்றாலும் பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவுக்கான எம்.எல்.ஏக்கள் விஜய்யிடம் இல்லை. அதனையடுத்து விசிக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், இடதுசாரிகளின் ஆதரவோடு முதலமைச்சராக பதவியேற்றார். தனக்கு ஆதரவு கொடுத்த விசிக, காங்கிரஸ் கட்சிகளுக்கு தன்னுடைய அமைச்சரவையில் இடம் கொடுத்து அழகு பார்த்திருக்கிறார். ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பதை வெறும் முழக்கமாக மட்டும் வைத்திருக்காமல் அதை செயல்படுத்தியதற்கும் பாராட்டுக்கள் குவிகின்றன.

Vijay Ditches His Signature Coat Suit Appears in Veshti Shirt for the First Time as Tamil Nadu CM
Photo Credit:

டெல்லி சென்ற விஜய்: சில நாட்களுக்கு முன்பு டெல்லிக்கு சென்று பிரதமர் மோடியை சந்தித்தார். அந்த சந்திப்பு பத்து நிமிடங்களுக்கும் குறைவாகவே நடந்தது. டெல்லி சென்றால் தமிழ்நாட்டு முதலமைச்சர்கள் பிரதமரை சந்தித்த பிறகு தமிழ்நாடு இல்லத்தில் வைத்து பத்திரிகையாளர்களையும் சந்திப்பார்கள். அது ஒரு மரபாகவே பின்பற்றப்பட்டு வந்தது. ஆனால் விஜய்யோ பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை. அங்கிருந்தவர்கள் சொல்லி பார்த்தும் அவர் யாரையும் கண்டுகொள்ளாமல் காரில் ஏறி புறப்பட்டு சென்றுவிட்டார்.

Also Read
ரோஜாவை பற்றி குடும்பத்திடம் கேட்டால்தான் தெரியும்.. வனிதாவை வெளுத்த பிரபலம்.. இந்த அடி அடிக்கிறாரே
ரோஜாவை பற்றி குடும்பத்திடம் கேட்டால்தான் தெரியும்.. வனிதாவை வெளுத்த பிரபலம்.. இந்த அடி அடிக்கிறாரே

கோட் சூட்டில் கலக்கும் விஜய்: இதற்கிடையே விஜய் முதலமைச்சராக பதவியேற்கும் போது என்ன உடை அணிந்துவருவார் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள். கண்டிப்பாக தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையைத்தான் அணிவார் என பெரும்பாலானோர் கணித்திருக்க; நீங்கள் நினைப்பது மாதிரி இந்த விஜய் இல்லை என்பதை சொல்லும் விதமாக கோட், சூட்டில் மேடையேறி பதவி பிரமாணம் செய்துகொண்டார். அப்போதிருந்து தொடர்ந்து கோட், சூட்டில் மட்டுமே உலா வருகிறார்.

கொண்டாடும் தொண்டர்கள்: அதை தவெகவினர் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார்கள். இத்தனை வருட தமிழ்நாடு அரசியலில் இருந்த கறை வேட்டி கலாசாரத்தை விஜய் ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டார்; இனிமேல் ஒவ்வொன்றும் இப்படித்தான் புதுமையாக இருக்கும் எனவும் புகழ்ந்து பேசிவருகிறார்கள். அதேசமயம் நீயா நானா நிகழ்ச்சியில் கோட் போடுவதால் கோபிநாத் எப்படி கலாய்க்கப்பட்டாரோ; அதே அளவுக்கு விஜய்யையும் இந்த விஷயத்தில் அவரது எதிர் முகாமில் இருப்பவர்கள் கலாய்க்கவே செய்தார்கள். அவர் அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளவில்லை.

மாறிய விஜய்: இந்நிலையில் முதலமைச்சரானதிலிருந்து முதல்முறையாக வேறு உடை அணிந்திருக்கிறார் விஜய். அதாவது, அவரது மேலாளர் ஜெகதீஷ் பழனிசாமியின் இல்லம் நீலாங்கரையில் அமைந்திருக்கிறது. அங்கு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக பட்டு வேட்டி, சட்டையில் சென்றிருந்தார். அவர் அங்கே சென்றதும் அங்கிருந்தவர்கள் அவரை கரகோஷம் எழுப்பி வரவேற்றார்கள். ஜெகதீஷின் தாய் விஜய்யை வாஞ்சையோடு கட்டியணைத்து, 'நீங்கள் வந்தது சந்தோஷம்' என கூறினார். இந்த வீடியோ இப்போது சோஷியல் மீடியாவில் சென்சேஷனல் ஆகியிருக்கிறது. இந்த நிகழ்ச்சில் திரையுலகத்தை சேர்ந்த கதிர் உள்ளிட்டோரும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

Read more about: vijay விஜய்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X