விவாகரத்து வழக்கில் அடுத்த கட்டம்.. என்ன நடக்கப் போகிறது?.. எதிர்பார்ப்பில் விஜய் ரசிகர்கள்!

சென்னை: நடிகரும் தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய் - அவரது மனைவி சங்கீதா ஆகியோரின் விவாகரத்து வழக்கு தொடர்பான இரண்டாவது கட்ட விசாரணை நாளை அதாவது ஜூன் 15ஆம் தேதி செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த சில மாதங்களாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், நாளைய விசாரணை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து அரசியலுக்கு வந்த விஜய், சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றார். அரசியல் பணிகளிலும், நிர்வாக நடவடிக்கைகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், அவரது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான இந்த வழக்கு மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.

விஜய் மற்றும் சங்கீதா இடையே கடந்த சில ஆண்டுகளாக கருத்து வேறுபாடு நிலவி வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இருவரும் தனித்தனியாக வசித்து வருவதாகவும், சமரச முயற்சிகள் பலமுறை நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளியாகின. சங்கீதா தாக்கல் செய்த விவாகரத்து மனுவில், விஜய்க்கு வேறு ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாகவும், அதுதான் விவாகரத்துக்கு முக்கிய காரணம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், விவாகரத்து கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பான முதல் கட்ட விசாரணை ஏற்கனவே நடைபெற்றது. அப்போது நீதிமன்றம் இருதரப்பினரிடமும் சில விளக்கங்களை கேட்டதாக கூறப்படுகிறது. மேலும் சமரச வாய்ப்புகள் உள்ளனவா என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

Vijay Divorce Case Enters Next Phase Fans Await Key Court Hearing

இப்படி இருக்கையில், இந்த வழக்கின் இரண்டாவது கட்ட விசாரணை நாளை நடைபெற உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக விஜய் நேரில் ஆஜராகிறாரா அல்லது அவரது வழக்கறிஞர்கள் மட்டுமே ஆஜராகிறார்களா என்பது குறித்த கேள்விகளும் எழுந்துள்ளன. அதேபோல் சங்கீதா தரப்பில் என்ன நிலைப்பாடு முன்வைக்கப்படும் என்பதையும் பலர் கவனித்து வருகின்றனர்.

நாளைய விசாரணைக்குப் பிறகு இந்த வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும், சமரச பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு உருவாகுமா அல்லது வழக்கு நேரடியாக விசாரணை கட்டத்திற்குச் செல்லுமா என்பது தெரியவரும் என சட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அரசியல் வட்டாரங்களும் இந்த வழக்கை உன்னிப்பாக கவனித்து வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X