இங்கிதம் கொஞ்சமாவது இருக்கனும்.. விஜய் - சங்கீதா விவகாரம் குறித்து ஜான் விஜய் விளாசல்
சென்னை: இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே நடிகர் விஜய் குறித்த சர்ச்சைகள் பெரும் பேசு பொருளாக மாறி வருகிறது. ஜன நாயகன் படம் வெளியாகாதது ரசிகர்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தினாலும், அவரது அரசியல் நடவடிக்கைகள் என்பது விஜய் திட்டமிட்டது போல மிகவும் தெளிவாக நகர்ந்து கொண்டு உள்ளது. இப்படி இருக்கையில் நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தை அணுகியது பெரும் சர்ச்சையாக இதுவரை உள்ளது.
அதுவும் நடிகர் விஜய் நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார் என்று சங்கீதா குறிப்பிட்டது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இப்படி இருக்கையில் இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் ஜான் விஜய் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

ஜான் விஜய்: அவர் அந்த பேட்டியில், " மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ளது சக நடிகனாக எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. புதிதாக அரசியலுக்கு வருபவர்களை நாம் அனைவரும் ஊக்குவிக்க வேண்டுமே தவிர, அவர்களை தொடர்ந்து குறை கூறிக் கொண்டு இருக்க கூடாது. என்னவெல்லாம் செய்யப் போகிறார் என்பது அவருக்கு மட்டும் தான் தெரியும்.
இங்கிதம்: பொதுவாகவே ஒரு மனிதனின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விவாதிப்பது என்பது தேவையில்லாத விஷயம். ஒவ்வொருவரும் அவரவர் வீட்டில் என்னென்ன செய்ய வேண்டுமோ, அதையெல்லாம் செய்தாலே போதுமானது. விஜய் தமிழ்நாட்டிற்கு என்ன செய்யப் போகிறார் என்பது குறித்து பேசினால் அது சந்தோஷமாக இருக்கும். விஜய் தனது பாத்ரூமில் என்ன செய்கிறார் என்பது குறித்து பேசுவதற்கு நம் யாருக்குமே அருகதை கிடையாது. விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசுவது என்பது இங்கிதம் இல்லாத செயல் என்றுதான் நான் நினைக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

நெட்டிசன்ஸ்: அவரது பேச்சுக்கு விஜய் ரசிகர்கள் மத்தியில் ஆதரவு கிடைத்து வந்தாலும், மேலும் பலர் விஜய் முறையாக விவாகரத்து பெற்று விட்டு, தனது தனிப்பட்ட வாழ்க்கையை அவரது விருப்படி அமைத்துக் கொண்டிருந்தால், அதில் யாருக்கும் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் அவரது திருமணத்தை மீறிய உறவை விஜய்யின் மனைவி கண்டுபிடித்து, அதைக் கண்டித்தும் விஜய் தன்னை திருத்திக் கொள்ளாதது தவறு என்றும் விமர்சித்து வருகிறார்கள். விஜய் - சங்கீதா விவாகரத்து மனு மீதான முதற்கட்ட விசாரணையானது வரும் ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏப்ரல் 23ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











