சங்கீதாவிடம் விஜய் தரப்பில் பேச்சுவார்த்தை? மனைவி மகன், மகளுக்கு கோடிகளில் செட்டில்மெண்ட் திட்டமா?
சென்னை: நடிகர் விஜய் குறித்த பரபரப்பான பேச்சுகளில் அவரது அரசியல் நடவடிக்கைகளைக் கடந்து வேறு ஒன்றாக இருப்பது அவரது விவாகரத்து விஷயம் தான். அதாவது நடிகர் விஜய் நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார் என்று குறிப்பிட்டு அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரிக்கை வைத்த மனு வெளியாகி பலருக்கும் அதிர்ச்சியை கிளப்பியது. இப்படி இருக்கையில் நடிகர் விஜய் தரப்பில், சங்கீதாவிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சங்கீதா தனது விசாரணை மனுவில், " எனது கணவர் விஜய் பிரபல நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார் என்பதை நான் கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமே கண்டுபிடித்துவிட்டேன். இது தொடர்பாக கண்டித்த பின்னர், நடிகையிடம் இனிமேல் பழக மாட்டேன் என்று உத்தரவாதம் அளித்தார். ஆனால் அவர் தொடர்ந்து நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார்.
கண்டித்த எனனையும் எனது புகுந்த வீட்டிற்குள் எனக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமைகளையும் விஜய் தடுத்து நிறுத்தினார். இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நானும் அவரும் ஒரே வீட்டில் தனித்தனியாக வாழ்ந்து வருகிறோம். தேவைப்பட்டால் ஆதாரங்களைத் தருகிறேன். விஜய் தரப்பில் மிரட்டலோ அழுத்தமோ ஏற்பட்டால் நடிகையின் பெயரையும் வெளியே சொல்வேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

கோடிகளில் செட்டில்மெண்ட்: சங்கீதாவின் இந்த விவாகரத்து மனு தொடர்பாக யாரும் வெளியே விவாதிக்க வேண்டாம் என்று தவெக கட்சி சார்பில் வாய்மொழி உத்தரவாக பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இப்படி இருக்கையில் நடிகர் விஜய் தரப்பில் இருந்து சங்கீதாவிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்துவதாகவும், சங்கீதா, மகன் மற்றும் மகள் என மூவருக்கும் ரூபாய் 250 கோடிகள் வழங்குவதாகும் பேச்சுவார்த்தையில் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
விவாகரத்து மனு: இதில் சங்கீதா விவாகரத்து மனுவை திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படியாக பேச்சு வார்த்தை நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது என்று முன்னணி செய்தி ஊடகங்களில் ஒன்றாக குமுதம் தரப்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு சங்கீதா தரப்பில் என்ன பதில் அளிக்கப்பட்டது என்பது குறித்த தகவல்கள் எதுவும் இல்லை. விஜய் தரப்பில் சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக வெளியாகி உள்ள தகவல் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











