5 ஆண்டுகள் கழித்து 'வாள்' படத்தில் விஜய் இரட்டை வேடம்?

By Siva

சென்னை: ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் வாள் படத்தில் தளபதி இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்று கிசுகிசுக்கப்படுகிறது.

துப்பாக்கி என்ற வெற்றிப் படம் கொடுத்த அதே ஏ.ஆர். முருகதாஸ் மற்றும் விஜய் மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளனர் இம்முறை வாள் படத்திற்காக. இதனால் இந்த படத்திற்கு தற்போதே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் படம் குறித்த சில சுவாரஸ்ய தகவல்களை பார்ப்போம்.

இரட்டை வேடம்

இரட்டை வேடம்

வாள் படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கவிருக்கிறார் என்று கிசுகிசுக்கப்பட்டது. இது குறித்து ஒரு செய்தி இணையதளம் விசாரித்து பார்த்ததில் அவர் இரட்டை வேடத்தில் நடிக்க வாய்ப்புகள் அதிகம் உண்டு என்று தெரிய வந்துள்ளது.

டபுள் ட்ரீட்

டபுள் ட்ரீட்

சிங்கிள் விஜய் ஸ்கிரீனில் வந்தாலே தியேட்டர்களில் விசில் சத்தம் காதை கிழிக்கும். இதில் அவர் இரட்டை வேடத்தில் நடித்தால் தியேட்டர்களில் டபுள் விசில் பறக்கும்.

வில்லு

வில்லு

பிரபுதேவா இயக்கத்தில் கடந்த 2009ம் ஆண்டு வெளியான வில்லு படத்தில் தான் விஜய் கடைசியாக இரட்டை வேடத்தில் நடித்தார். வில்லு படம் ஓடவில்லை. எல்லோருக்கும் அனைத்து படங்களும் ஹிட்டாகும் என்றும் கூற முடியாதல்லவா.

ஏடிஎம்

ஏடிஎம்

முன்னதாக விஜய் அழகிய தமிழ் மகன் படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து அசத்தினார். படம் அவரது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.

மேஜிக்

மேஜிக்

விஜய் இதுவரை இரட்டை வேடத்தில் நடித்துள்ள படங்கள் ஜொலிக்காவிட்டாலும் வாள் அட்டகாசமான வெற்றி பெற வாழ்த்துக்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X