துப்பாக்கி இந்தி ரீமேக்கில் கௌரவ வேடத்தில் வருகிறாரா விஜய்?
மும்பை: துப்பாக்கி படத்தின் இந்தி ரீமேக்கான ஹாலிடேவில் இளையதளபதி விஜய் கௌரவ வேடத்தில் வருகிறார் என்று கூறப்படுகிறது.
விஜய் நடித்த துப்பாக்கி படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இந்தியில் அக்ஷய் குமாரை வைத்து ஹாலிடே என்ற பெயரில் எடுத்துள்ளார். படத்தில் அக்கிக்கு ஜோடியாக பிரபுதேவாவின் ஆஸ்தான நாயகியான சோனாக்ஷி சின்ஹா நடித்துள்ளார்.
படம் வரும் ஜுன் மாதம் 6ம் தேதி ரிலீஸாகிறது.

கௌரவ வேடம்
ஹாலிடே படத்தில் விஜய் கௌரவ வேடத்தில் வருகிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

பிரபுதேவா
பிரபுதேவா சிறுத்தை படத்தை இந்தியில் ரவுடி ராத்தோர் என்ற பெயரில் அக்ஷய் குமாரை வைத்து ரீமேக் செய்து வெளியிட்டார். படம் ஹிட்டானது. அந்த படத்தில் ஒரு பாடலில் சில ஸ்டெப்ஸ்கள் போட்டிருந்தார் இளையதளபதி விஜய்.

அக்கி, விஜய்
ரவுடி ராத்தோர் படத்தில் விஜய் அக்ஷய்குமார், பிரபுதேவாவுடன் சேர்ந்து தான் ஸ்டெப்ஸ் போட்டார். அதற்கே அக்கி அசந்துவிட்டார்.

சென்டிமென்ட்
விஜய் சில ஸ்டெப்ஸ் போட்ட படம் ஹிட்டானதையடுத்து தன் படத்திலும் விஜய்யை கௌரவ வேடத்தில் நடிக்க வைக்க விரும்புகிறாரோ முருகதாஸ்?


Click it and Unblock the Notifications











