ஜில்லாவுக்காக இங்கிலாந்து மாடலுடன் சேர்ந்து குத்தாட்டம் போடும் விஜய்
சென்னை: ஜில்லா படத்திற்காக ஒரு பாடலில் விஜய் இங்கிலாந்து மாடலும், டான்சருமான ஸ்கார்லட் வில்சனும் நடனமாட உள்ளார்.
இந்த ஆண்டு பொங்கல் தமிழக ரசிகர்களுக்கு குதூகலமான பொங்கல் என்று தான் கூற வேண்டும். பொங்கலுக்கு ரஜினியின் கோச்சடையான், அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய படங்கள் ரிலீஸாகின்றன. மேலும் ஜனவரி 26ம் தேதி கமலின் விஸ்வரூபம் 2 படமும் வருகிறது.
இந்நிலையில் ஜில்லா படக்குழுவினர் தீயா வேலை செய்து வருகிறார்கள்.

ஸ்கார்லட்
ஜில்லா படத்தில் கவர்ச்சியாக ஒரு பாடல் வைத்துள்ளார்களாம். இந்த பாட்டுக்கு விஜய்யுடன் சேர்ந்து ஆடப் போவது இங்கிலாந்து மாடலும், டான்சருமான ஸ்கார்லட் வில்சன்.

இந்தி, தெலுங்கில்
ஸ்கார்லட் ஏற்கனவே இந்தி, தெலுங்கு படங்களில் குத்தாட்டம் போட்டுள்ளார். தற்போது கோலிவுட்டிலும் ஆட்டம் போட வருகிறார்.

பெரிய்ய செட்
விஜய், ஸ்கார்லட் மற்றும் 2 மாடல்கள் ஆடும் இந்த பாடலுக்கு ராஜு சுந்தரம் நடனம் அமைக்கிறார். பாடலை ஹைதராபாத்தில் பெரிய செட்டில் படமாக்குகிறார்களாம்.

விஜய்
ஸ்கார்லட்டுடன் விஜய் ஆடும் பாடலுக்கு அவர்கள் வேகமாக நடனமாட வேண்டி இருக்குமாம். நடனம் ஆட விஜய்க்கு சொல்லியா கொடுக்க வேண்டும். கலக்கிடுவார்ல!


Click it and Unblock the Notifications











