இசை வெளியீட்டு விழாவெல்லாம் வேண்டாங்கண்ணா: விஜய்
சென்னை: தான் நடித்துள்ள ஜில்லா படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த வேண்டாம் என்று இளையதளபதி விஜய் கூறிவிட்டாராம்.
விஜய், காஜல் அகர்வால், மோகன்லால் நடித்துள்ள ஜில்லா படம் பொங்கலுக்கு ரிலீஸாகிறது. இந்நிலையில் படத்தின் இசை நாளை மறுநாள் வெளியிடப்படுகிறது.
படத்தின் இசை சிடிக்களை மக்கள் நேரடியாக கடைகளில் வாங்கலாம்.

பிரமாண்டம்
விஜய் படங்களின் இசை வெளியீட்டு விழாக்கள் பிரமாண்டமாக நடத்தப்படும். நண்பன், துப்பாக்கி, தலைவா ஆகிய படங்களின் இசை வெளியீட்டு விழாக்கள் பிரமாண்டமாக நடத்தப்பட்டன.

தலைவா
தலைவா படத்திற்கு ஏற்பட்ட பிரச்சனையால் விஜய் சற்று மிரண்டு போயுள்ளார். படத்தை ரிலீஸ் செய்வதற்குள் விஜய்யும், இயக்குனர் விஜய்யும் ஓய்ந்துவிட்டனர்.

ஜில்லாவாவது
தலைவா போன்று இல்லாமல் ஜில்லா படத்தையாவது பிரச்சனை இன்றி ரிலீஸ் செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் விஜய்.

விழா வைத்தால்...
இசை வெளியீட்டு விழா வைத்து அதில் யாராவது எசக்கு பிசக்காக பேசி யார் கோபத்தையாவது கிளப்பி படத்தை ரிலீஸ் செய்யவிடாமல் பிரச்சனை ஏற்படுத்திவிடுவார்களோ என்று விஜய் அஞ்சுகிறாராம். அதனால் ஜில்லா படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக கொண்டாட வேண்டாம் என்று கூறிவிட்டாராம் தளபதி. பிரச்சனை இன்றி ஜில்லா ரிலீஸாக வாழ்த்துக்கள் தளபதி.


Click it and Unblock the Notifications











