மாஸ்டர் படம் குறித்து கசிந்த முக்கிய ரகசியம் தீயாய் பரவும் தகவல்..பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
சென்னை: மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய் டபுள் ஆக்ஷனில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
மாநகரம், கைதி உள்ளிட்ட படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் மாஸ்டர்.
கடந்த 9 ஆம் தேதி வெளியாக வேண்டிய இப்படம் கொரோனா வைரஸ் தாக்குதலால் ரிலீஸ் ஆகாமல் உள்ளது.

5 மொழிகளி ரிலீஸ்
இருப்பினும் சோர்ந்துவிடாத படக்குழு இந்த ஊரடங்கு நேரத்தை பக்காவாக பயன்படுத்தி வருகிறது. அதாவது தமிழுடன் சேர்த்து மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் படத்தை ரிலீஸ் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

முக்கிய தகவல்
இதனிடையே மாஸ்டர் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகாது, OTT பிளாட்ஃபார்மில் தான் ரிலீஸ் ஆகவுள்ளது என்ற தகவலும் பரவியது. ஆனால் அதனை தயாரிப்பாளர்கள் மறுத்தனர். இந்நிலையில் மாஸ்டர் படம் குறித்து மற்றொரு முக்கிய தகவல் தீயாய் பரவி வருகிறது.

டபுள் ஆக்ஷன்?
அதாவது நடிகர் விஜய் மாஸ்டர் படத்தில் டபுள் ஆக்ஷனில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்துள்ள இந்த மாஸ்டர் திரைப்படம் ஆக்ஷன் என்டெர்டெயினர் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

ரசிகர்களுக்கு விருந்து
மாஸ்டர் படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கும் தகவலை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பெரும் ரகசியமாக வைத்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவல் உண்மையாகிவிட்டால், இது விஜய் ரசிகர்களுக்கு உண்மையிலேயே ஒரு பெரிய விருந்தாக இருக்கும்.

பல்வேறு யூகங்கள்
அதோடு நடிகர் விஜய் அடுத்தடுத்து இரட்டை வேடத்தில் நடித்த படம் என்ற பெயரும் கிடைக்கும். மேலும், 'மாஸ்டர்' படத்தில் ஆண்ட்ரியா ஜெர்மையாவின் கதாபாத்திரம் பற்றியும் லோகேஷ் கனகராஜ் இதுவரை வாய் திறக்கவில்லை. இந்நிலையில் இப்படி ஒரு தகவல் வெளியாகியிருப்பது படம் குறித்த பல்வேறு யூகங்களுக்கு வழி வகுத்துள்ளது.


Click it and Unblock the Notifications











