வெள்ளம் பாதித்த கேரளாவுக்கு விஜய் ரூ. 70 லட்சம் நிதியுதவி: ரசிகர்கள் பெருமிதம்
சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு நடிகர் விஜய் ரூ. 70 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.
கேரளாவில் பெய்த கனமழையால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர். ஒரு வழியாக மழை நின்று நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு நடிகர்கள் கார்த்தி, சூர்யா, விஜய் சேதுபதி, விக்ரம், ரஜினி, கமல், சிவகார்த்திகேயன், ஜி.வி. பிரகாஷ், நடிகைகள் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் என்று பலரும் நிதியுதவி அளித்துள்ளனர்.
நடிகர் விக்ரம் ரூ. 35 லட்சம் நிதியுதவி அளித்தார். இந்நிலையில் விஜய் இருப்பதிலேயே அதிகபட்சமாக ரூ. 70 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். விஜய்க்கு கேரளாவில் ஏகப்பட்ட ரசிகர்கள், ரசிகைகள் உண்டு.
விஜய் படம் ரிலீஸானால் அதை திருவிழா போன்று கொண்டாடுவார்கள். தன்னை கொண்டாடும் மக்களுக்காக தாராளமாக நிதியுதவி அளித்துள்ளார் விஜய்.
விஜய் செய்த நல்ல காரியம் பற்றி அவரின் ரசிகர்கள் ட்விட்டரில் பெருமையாக பேசி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











