Jana Nayagan: தளபதியின் தாறுமாறு டான்ஸ்.. விஜய்யின் ஜன நாயகன் 2வது சிங்கிள் எப்படி இருக்கு?

சென்னை: அ. வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜன நாயகன் படத்தின் 2வது பாடலான "ஒரு பேரே வரலாறு" பாடல் வெளியாகி தளபதி ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது. வாரிசு படத்தில் இடம்பெற்ற "தீ இது தளபதி" பாடல் போல அதிரடியாக "ஒரு பேரே வரலாறு" என்கிற பாடலை அனிருத் விஜய் ரசிகர்களுக்காக அட்டகாசமாக கொடுத்துள்ளார்.

ஆளப்போறான் தமிழன் பாடலை எழுதிய பாடலாசிரியர் விவேக் தொடர்ந்து தளபதி விஜய்க்கு தரமான பாடல்களை கொடுத்து வந்த நிலையில், விஜய்யின் கடைசி படமான ஜன நாயகன் படத்தில் "ஒரு பேரே வரலாறு" பாடலை பட்டாசான வரிகளால் அடுக்கியிருக்கிறார்.

Vijay done a super special steps for Jana Nayagan second single fans rejoice
Photo Credit:

"நீ தூணா நின்னா ஒரு இனமே வாழும்.. நீ தூரம் போனால் எங்க உயிரே போகும்" போன்ற வரிகளால் விஜய் ரசிகர்களை உருக வைத்துள்ளார்.

தெறியா இருக்கு: ஜன நாயகன் 2வது சிங்கிள் பாடலான "ஒரு பேரே வரலாறு" பாடல் விஜய் ரசிகர்களுக்கான தேசிய கீதமாகவே மாறிவிடும் என்றே தெரிகிறது. இசை வெளியீட்டு விழாவுக்கு முன்பாகவே ராக்ஸ்டார் அனிருத் தளபதி ரசிகர்களுக்கான 2வது ட்ரீட்டையும் பக்காவாக பேக் பண்ணி கொடுத்துள்ளார். பாடல் வரிகள் மற்றும் காட்சிகள் என அனைத்துமே தெறியாக உள்ளது.

தளபதியின் தாறுமாறு டான்ஸ்: ஜன நாயகன் படத்துக்குப் பிறகு தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் தவெக தலைவராகவே விஜய் செயல்பட உள்ளார். இன்று ஈரோட்டில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கூட பல பேர் கரூர் சம்பவத்துக்குப் பிறகும் குழந்தைகளுடன் கூட்டத்துக்கு வந்ததை பார்த்தால் பயமாக இருந்தாலும், அவர்கள் விஜய் மீது வைத்துள்ள அளவுக்கடந்த நம்பிக்கை மற்றும் பாசத்துக்கு எல்லாம் ஈடு செய்யும் விதமாக கடைசி படத்தில் தாறுமாறான டான்ஸ் ஸ்டெப்ஸ் எல்லாம் போட்டு நடனமாடியுள்ளார். அதன் சில காட்சிகள் இந்த லிரிக் வீடியோவில் இடம்பெற்றே ரசிகர்களை குஷியாக்கி உள்ளது.

உனக்கே ஒரு யுத்தம் இனியே: பாடலாசிரியர் விவேக் பக்காவாக விஜய்க்கான அரசியல் பாடலாகவும் இந்த பாடலை உருவாக்கியுள்ளார். அதே சமயம் ரசிகர்களுக்கு என்ன தேவையோ அதையும் பூர்த்தி செய்துள்ளார். "உனக்கே ஒரு யுத்தம் இனியே" போன்ற அரசியல் வரிகளையும் அழகாக செதுக்கியிருக்கிறார் பாடலாசிரியர் விவேக். விஷால் மிஷ்ரா மற்றும் அனிருத் இணைந்து பாடியுள்ள இந்த பாடல் யூடியூபில் அதிக வியூஸ்களை அள்ளுமா என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X