விஜய்-யால் அஜித் மார்க்கெட்டை அசைக்கக்கூட முடியாது.. பிரபல இயக்குனர் சவால்!
சென்னை: தமிழ் சினிமாவில் இப்பொழுது இரு துருவங்களாக உள்ளவர்கள் விஜய் மற்றும் அஜித்
இருவரின் தரைப்படங்கள் வெளியாகும் போதும் மாறி மாறி வசூல் சாதனைகளை செய்து வருகின்றன
இந்த வகையில் வெளியான வலிமையும் பல்வேறு சாதனைகளை செய்து வரும் நிலையில் பிரபல இயக்குனர் விஜய்-யால் அஜித் மார்க்கெட்டை பிடிக்க முடியாது என துணிச்சலாக பேசியுள்ளார்.

இரண்டுமே சூப்பர் ஹிட்
சமகாலத்தில் அறிமுகம் ஆனதால் விஜய் மற்றும் அஜித் தமிழ் சினிமாவில் போட்டியாளர்களாக பார்க்கப்படுகின்றனர். இருவரின் படங்கள் ஒவ்வொரு தடவை வெளியாகும்போது ரசிகர்கள் போட்டி போட்டு வெற்றி படமாக கொண்டாடுகின்றனர் . கடைசியாக ஜில்லா மற்றும் வீரம் ஒரே நேரத்தில் இருவருக்கும் வெளியாகி இரண்டுமே சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது அதன் பிறகு விஜய் மற்றும் அஜித் படங்கள் எதுவும் இதுவரை மோதிக் கொள்ளவில்லை .

கல்லூரி ப்ரொபஸராக
இருவரின் திரைப்படங்களும் தனித்தனியாக ரிலீஸ் ஆகும் போதே மிகப்பெரிய வசூல் சாதனைகளை செய்து வருகிறது. அந்த வகையில் விஜய்க்கு கடைசியாக வெளியான மாஸ்டர் திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் விஜய் முதல் முறையாக கல்லூரி ப்ரொபஸராக நடித்திருப்பார். விஜய் சேதுபதி இந்த படத்தில் பவானி என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக மிரட்டி இருப்பார். தமிழைத் தொடர்ந்து மற்ற மொழி ரசிகர்களாலும் மாஸ்டர் கொண்டாடப்பட்டு மிகப்பெரிய வெற்றி பெற்றது.

முழுக்க முழுக்க ஆக்ஷனில்
இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு அஜித்தின் வலிமை திரைப்படம் பிப்ரவரி 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்றது. அஜித் படங்களில் இதுவரை இல்லாத அளவிற்கு முழுக்க முழுக்க ஆக்ஷனில் வெளியான வலிமை இயக்குனர் ஹெச் வினோத் இயக்கியிருந்தார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில்
நேர்கொண்டபார்வை படத்திற்குப் பிறகு மீண்டும் அஜித் ஹெச் வினோத் இணையும் இரண்டாவது திரைப்படம் என்பதால் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. போனி கபூர் தயாரிப்பில் வெளியான இந்த படத்தில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடித்து இருப்பார். ஸ்டன்ஸ்,ஆக்ஷன், சென்டிமென்ட் என முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களுக்கு பிடிக்கின்ற கையில் வெளியான வலிமை வெற்றி பெற்றது. இப்போது அஜித், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது

அஜித் மார்க்கெட்டை அசைக்கக்கூட முடியாது
தமிழ் சினிமாவில் இரண்டு துருவங்களாக உள்ள அஜித் மற்றும் விஜய் இருவரின் மார்க்கெட்டும் இப்பொழுது உச்சத்தில் உள்ளது. இந்த நிலையில் பிரபல இயக்குனர் முரளி அப்பாஸ் கூறுகையில் தமிழ் சினிமாவைப் பொருத்தவரையிலும் இப்போது மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டம் விஜய், அஜித்க்கு உள்ளது. ஒரு காலத்தில் எம்ஜிஆர் அரசியலுக்கு வந்த பிறகு இனி எல்லாமே சிவாஜிதான் என பலரும் கூறினார்கள் ஆனால் அதன்பிறகு சிவாஜி தொடர்ந்து கௌரவ வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார் பின் ரஜினி கமல் என்ற இரு வல்லவர்கள் தமிழ் சினிமாவை ஆண்டார்கள் . எனவே விஜய் எத்தனை ஹிட் படங்கள் கொடுத்தாலும் அஜித் மார்க்கெட்டை நீக்கவோ குறைக்கவோ ஏன் அசைக்கக்கூட முடியாது என முரளி அப்பாஸ் பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











