ஒரு டாய்லெட் விலை 7 லட்சமா?.. விஜய், துல்கர் சல்மான்.. அட அந்த நடிகையும் இந்த அபார்ட்மெண்ட்லயா?

சென்னை: நடிகர்கள் மற்றும் நடிகைகள் பிரம்மாண்டமான வீடுகளை வாங்கி அதில் வசித்து வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். பாலிவுட் நடிகர்கள் மும்பையில் உள்ள பாந்த்ரா, ஜூஹு உள்ளிட்ட பெரிய பெரிய ஏரியாக்களில் 100 கோடி, 200 கோடிக்கு எல்லாம் வீடுகளை வாங்கி வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் உள்ள பட்டினப்பாக்கம் ஏரியாவில் புதிதாக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள அபார்ட்மெண்ட்டில் நடிகர்கள் விஜய், துல்கர் சல்மான், ஆர்யா, ரம்பா மற்றும் திரிஷா உள்ளிட்ட நடிகைகள் வீடு வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Vijay Dulquer Salman House

கலாட்டா யூடியூப் சேனலுக்கு பி.ஆர். சுந்தர் எனும் மார்க்கெட் அனாலிஸ்ட் தனது வீட்டின் ஹோம் டூர் வீடியோவில் நடிகர்கள் தங்கியிருக்கும் இடத்தில் தனக்கும் ஒரு பென்ட் ஹவுஸ் கிடைத்திருப்பது பெருமையாக உள்ளது என பேசியுள்ளார்.

ரம்பா - விஜய் சந்திப்பு: சமீபத்தில், நடிகை ரம்பாவுடன் நடிகர் விஜய் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தீயாக பரவிய நிலையில், ரம்பாவுடன் விஜய் அடுத்த படத்தில் நடிக்கப் போகிறாரா? என்றெல்லாம் கேள்விகள் கிளம்பின. இந்நிலையில், நடிகை ரம்பாவும் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு போர்ஷனை வாங்கி குடி வந்திருக்கிறார் என்றும் அதுதான் அந்த போட்டோவுக்கான பின்னணி என்றும் கூறுகின்றனர்.

பென்ட் ஹவுஸ் பிரபலங்கள்: சென்னையில் உள்ள பல முன்னணி நடிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பணம் படைத்த பல பிரபலங்கள் அந்த அபார்ட்மெண்டில் தனித்தனி குடியிருப்புகளை வாங்கியுள்ளதாக பி.ஆர். சுந்தரம் கூறியுள்ளார். நடிகர்கள் விஜய், துல்கர் சல்மான், ஆர்யா உள்ளிட்ட பிரபலங்கள் இங்கே வீடு வாங்கியுள்ளனர் எனக் கூறியுள்ளார்.

500 கோடி முதல் 7 லட்சம் வரை: பி.ஆர். சுந்தரம் வீட்டில் உள்ள ஒரு டிஜிட்டல் பெயிண்டிங்கின் விலை 500 கோடி ரூபாய் என்றும் அவரது வீட்டில் உள்ள டாய்லெட்டின் விலை 7 லட்சம் என்றும் வீட்டுக்குள்ளே தனியாக தியேட்டர், லிப்ட் வசதி, ஒவ்வொரு அபார்ட்மெண்ட் போர்ஷனுக்கும் தனித்தனி பிரைவேட் நீச்சல் குளங்கள் இருப்பதாகவும் அவர் சொல்வதை கேட்டாலே மலைக்க வைக்கிறது.


விஜய்யை பார்த்திருக்கிறேன்: 9த் பிளாக்ல தான் விஜய் இருக்கிறார். நான் ஒரு சில முறை தான் அவரை பார்த்துள்ளேன். ஆனால், என்னுடைய குடும்பத்தினர் அடிக்கடி சந்தித்துள்ளனர். அவருடன் பேசுவார்கள் என பி.ஆர். சுந்தர் கூறியுள்ளார். விஜய், திரிஷா எடுத்துக் கொண்ட அந்த லிப்ட் போட்டோவும் இந்த அபார்ட்மெண்டில் எடுக்கப்பட்டது தான் என்றும் கமெண்ட்டுகள் பறக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X