ஆந்திராவை கலக்கும் அத்தரின்டிகி டாரேடி.. ரைட்ஸ் வாங்கத் துடிக்கும் விஜய்!

By Sudha

ஆந்திராவைக் கலக்கிக் கொண்டிருக்கும் பவன் கல்யாணின் அத்தரின்டிகி டாரேடி படத்தை தமிழில் ரீமேக் செய்ய விஜய் முடிவு செய்து ரைட்ஸுக்காக முயற்சித்து வருகிறாராம்.

2013ம் ஆண்டின் மிகப் பெரிய தெலுங்குப் படம் என்ற பெயரை இந்த டாரேடி பெற்று வசூலைக் குவித்துக் கொண்டிருக்கிறது.

ஏகப்பட்ட தெலுங்குப் படங்களின் தமிழ் ரீமேக்கில் நடித்து அனுபவம் உடைய விஜய் இந்தப் படத்தைப் பார்த்து இம்பிரஸ் ஆகி இதை தமிழில் நடிக்க ஆர்வமாகியுள்ளாராம்.

மாபெரும் வசூல் படம்

மாபெரும் வசூல் படம்

பவன் கல்யாண் நடிப்பில் வெளியாகியுள்ள டாரேடி, தெலுங்கின் மிகப் பெரிய வசூல் பட வரிசையை நோக்கி வேகமாக போய்க் கொண்டிருக்கிறது.

பாக்ஸ் ஆபீஸ் சாதனை

பாக்ஸ் ஆபீஸ் சாதனை

தெலுங்கில் பல பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளை முறியடிக்கவும் ஆரம்பித்துள்ளது இந்தப் படம்.

தமிழிலும் கலக்குமா?

தமிழிலும் கலக்குமா?

இந்தப் படத்தை இப்போது தமிழுக்குக் கொண்டு விஜய் தரப்பு களம் இறங்கியுள்ளதாம்.

செம கிராக்கி

செம கிராக்கி

ஆனால் இப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய பெரும் கிராக்கி ஏற்பட்டுள்ளதாம். படத்தின் உரிமையை வாங்க பலரும் முயன்று வருகின்றனராம். ஆனால் விஜய்க்கு இப்படம் கிடைக்க அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

பிவிஎஸ்என் பிரசாத் தயாரிக்கலாம்

பிவிஎஸ்என் பிரசாத் தயாரிக்கலாம்

இப்படத்தை தமிழில் பிவிஎஸ்என் பிரசாத் தயாரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு பிரபல தமிழ் இயக்குநர் இப்படத்தை தமிழில் இயக்க முன்வந்துள்ளாராம்.

இதுவரைக்கும் யாருக்கும் விற்கவில்லை

இதுவரைக்கும் யாருக்கும் விற்கவில்லை

ஆனால் இதுவரை இந்தப் படத்தின் ரீமேக் உரிமை யாருக்கும் விற்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

விஜய்க்கு செம பொருத்தம்

விஜய்க்கு செம பொருத்தம்

ஆனால் இந்தப் படம் விஜய்க்கு மிகப் பொருத்தமாக இருக்கும் என்று பலரும் கூறுகிறார்களாம். எனவே விஜய்யே பெரும்பாலும் தமிழ் ரீமேக்கில் நடிக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

'கில்லி' அடிப்பாரா விஜய்?

'கில்லி' அடிப்பாரா விஜய்?

ஏற்கனவே கில்லி உள்பட பல படங்களை தெலுங்கிலிருந்து தமிழுக்கு வெற்றிகரமாகக் கொடுத்தவர் விஜய். இப்போது டாரேடியையும் அவரே நடிப்பாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்... இதை விட வேற என்ன வேலை நமக்கு ...

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X