சிக்கலில் விஜய்.. ரூ.100 கோடி முறைகேடு? ஒரு வாரம் தான் அவகாசம்.. நீதிமன்றமே செக் வெச்சுட்டாங்களே
சென்னை: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இந்த இரண்டு தொகுதிகளிலும் அவர் சமர்பித்த வேட்பு மனுவில் அவர் குறிப்பிட்டுள்ள சொத்து மதிப்புகள் வேறு வேறாக உள்ளதாகவும், இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்றும் கூறி வேட்பாளர் ஒருவர் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை நடத்திய சென்னை உயர்நீதிமன்றம், ” விஜய் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் ரூ.100 கோடி அளவுக்கு சொத்தை குறைத்து காண்பித்தது முறைகேடானது. விஜய்க்கு எதிரான வழக்கில் வருமான வரித்துறை ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளது. பெரம்பூர் தொகுதி வேட்புமனுவில், ரூ.115.13 கோடி சொத்து எனக் கூறிய விஜய். திருச்சி கிழக்கு தொகுதியில், ரூ.220.15 கோடி சொத்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் விஜய் பெரம்பூரில் மட்டும் இரண்டு முறை வேட்புமனு தாக்கல் செய்தார். அதற்கு காரணம் மதுரை மாநாட்டில் ஏற்பட்ட சில பிரச்னைகளால் அவர் மீது மதுரை மாவட்ட காவல்துறை வழக்கு பதிவு செய்திருந்தது. அது தொடர்பாக விஜய் எந்தவிதமான விபரங்களையும் தனது வேட்பு மனுவில் குறிப்பிடவில்லை. இப்படி இருக்கையில் நடிகர் விஜய் பெரம்பூர் தொகுதியில் இரண்டாவது முறையாக வேட்புமனு அளித்தார்.


Click it and Unblock the Notifications