TVK Vijay: நாமினேஷனில் சொதப்பிய விஜய்.. கட்சித் தலைவருக்கு இது கூட தெரியாதானு கலாய்க்கும் நெட்டிசன்கள்!
சென்னை: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் இரண்டு தொகுதிகளில் விஜய் போட்டியிடுகிறார். இந்நிலையில் நடிகர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் நாமினேஷன் தாக்கல் செய்தார். இதில் இரண்டிலும் மாறி மாறி தகவல்களைக் கொடுத்துள்ளதால் அரசியல் தளத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் வரும் 6ஆம் தேதிக்குள் சரியான தகவல் பொருந்திய நாமினேஷனை விஜய் தாக்கல் செய்யவில்லை என்றால் அவரது நாமினேஷன் தேர்தல் ஆணையத்தால் ரத்து செய்யப்படும். இது தொடர்பாக இணையவாசிகள் பலரும் கட்சித் தலைவரே இப்படி சொதப்பலாமா கலாய்த்து வருகிறார்கள்.

குறிப்பாக அவரது இரண்டு தொகுதிகளுக்கான நாமினேஷனில், பெரம்பூரில் தாக்கல் செய்ததில் அவருடைய வயது, 52 என்றும் திருச்சி கிழக்கில் 51 வயது என்றும் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்த வேட்பு மனுவில் அவர் மீது எந்த வழக்கும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் திருச்சி கிழக்குத் தொகுதியில் தாக்கல் செய்த வேட்புமனுவில் அவர் மீது வழக்குகள் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இரண்டு தொகுதிகளிலும் இரண்டு விதமான தகவல்களை விஜய் கொடுத்துள்ளதால், இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் பலராலும் விமர்சிக்கப்படுகிறது.
தோல்வி பயம்: நடிகர் விஜய் இந்த தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதே அரசியல் தளத்தில் கடுமையான விமர்சனங்களை உருவாக்கியது. விஜய்க்கு தோல்வி பயம் அதனால் தான் அவர் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார் என்று காட்டமாக விமர்சித்து வருகிறார்கள். குறிப்பாக திமுக தரப்பில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடலாம் என்று சட்டம் அனுமதிக்கிறது. அப்படி இருக்கும்போது, அவர் அதைப் பயன்படுத்தி, சட்டத்திற்குட்பட்டு போட்டியிடுகிறார் என்று அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.
சீமான்: ஆனால் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானோ மிகவும் காட்டமாக விமர்சித்து வருகிறார். குறிப்பாக நான் இரண்டு முறை தேர்தலில் நின்று தோல்வியைச் சந்தித்துள்ளேன். இரண்டு முறையும் நான் ஒரு தொகுதியில் தான் போட்டியிட்டேன். இம்முறையும் ஒரு தொகுதியில் தான் நின்றுள்ளேன். இரண்டு தொகுதியில் போட்டியிடுவது என்பது மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பது என்று பொருள் என்றும் காட்டமாக விமர்சித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











