என்னை எல்லாரும் வெறுக்குறாங்க... தற்கொலை செய்த விஜய் ரசிகரின் கலங்க வைக்கும் ட்வீட்ஸ்!
சென்னை: விஜயின் தீவிர ரசிகரான பாலாவின் மரணம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் உலுக்கி வருகிறது.
தமிழகத்தில் அதிக ரசிகர்களை கொண்டுள்ள நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். குழந்தைகள், இளைஞர்கள், இளம் பெண்கள், நடுத்தர வயதினர், வயதானவர்கள் என அனைத்து வயதினரையும் ரசிகர்களாக கொண்டுள்ளார்.
இந்நிலையில் விஜயின் தீவிர ரசிகரான பாலா என்ற இளைஞர் தற்கொலை செய்து உயிரை விட்டுள்ளார். இதனை அறிந்த விஜயின் சக ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

குடும்பத்திற்கு ஆறுதல்
அவர் மரணமடைந்த தகவலை தொடர்ந்து சமூக வலைதளங்களில் #RIPBala என்ற ஹேஷ்டேக்கை ட்ரென்ட் செய்து அவர் குறித்து உருக்கமாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். நடிகர் விஜய் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பதில் சொன்ன பாலா
இந்நிலையில் பாலா கடைசியாக ஆகஸ்ட் 11ஆம் தேதி பதிவிட்ட டிவிட்டுகள் வைரலாகி வருகின்றன. அதில் ரொம்பவே உருக்கமாக கலங்க வைக்கும் வகையில் பல டிவிட்டுகள் இடம் பெற்றுள்ளன. பாலா, காதல் தோல்வியால் தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்பட்ட நிலையில் அதற்கும் இறப்பதற்கு முன்பு பதில் கூறிவிட்டு சென்றிருக்கிறார்.

வெறுக்குறாங்க..
அதாவது, நீங்க நெனைக்கிற மாறி லவ் ஃபெயிலியர் எனக்கு இல்லை வீட்ல பிரச்சனை அதான்.. என்றும்
என்னை எல்லாரும் வெறுக்குறாங்க என்றும் டிவிட்டியுள்ளர். அவரது இந்த ஒரு டிவிட் ஆயிரம் முறைக்கு மேல் ரீடிவிட் செய்யப்பட்டுள்ளது.

அவ்ளோ கேவலமானவனா?
மேலும் நான் அவ்ளோ கேவலமானவனா? என்று கேட்டு கண்ணீர் விடும் ஈமோஜிகளையும் ஷேர் செய்துள்ளார் ரசிகர் பாலா. அதோடு #Master என்ற ஹேஷ்டேக்கையும் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் அவர் ஏதோ ஒரு பிரச்சனையில் இருந்துள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது.

பார்க்காமலே போகிறேன்
அதோடு தனது கடைசி நிறைவேறாமலேயே தான் போகப் போவதாக தெரிவித்துள்ளார். அதாவது, தலைவன் படம் பார்க்காமலே போகிறேன்.. தலைவனையும் பார்க்காமல் போகிறேன் என உருக்கமாக தெரிவித்துள்ளார். அவரது இந்த பதிவை ஆறாயிரம் பேர் வரை ரீடிவிட் செய்துள்ளனர். பத்தாயிரம் பேர் வரை லைக்ஸ் செய்துள்ளனர்.

இங்கேதான் சந்தோஷம்
மற்றொரு பதிவில் என்னையும் மதிச்சி இவ்ளோ நாள் சப்போர்ட் பண்ணுன உங்க எல்லாருக்கும் ரொம்ப நன்றி இங்க நெறய மாம்ஸ்,மச்சான்ஸ் ,நண்பர்கள்னு கெடைச்சாங்க இங்க கொஞ்சம் நாள் சந்தோஷமா இருந்தேன் அது போதும் எப்பவும் என்னோட லவ் உங்க எல்லாருக்கும் இருக்கும். எல்லாரும் சந்தோஷமா இருங்க எப்பவும்.. என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

மாத்த யுஸ் பண்ணுங்க
மேலும் ஒரு பதில் என் ஐடி யாருக்காவது வேணுமா உங்க பெயர் மாத்தி யூஸ் பண்ணிக்கோங்க.. என கூறியுள்ளார். மற்றொரு பதிவில் இங்க ஒருத்துருக்காவது என்னை புடிக்குமா??? என்றும் கேட்டுள்ளார் பாலா. இதனை பார்த்த பலரும் கண்களே கலங்கிவிட்டதாக கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











