Leo Release - லியோ கொண்டாட்டத்தில் அசம்பாவிதம்.. ரசிகருக்கு நேர்ந்த சோகம்.. இப்படி ஆகிப்போச்சே

திருவண்ணாமலை: Leo Release (லியோ ரிலீஸ்) லியோ படத்தின் முதல் காட்சியை பார்க்க டிக்கெட் இல்லாமல் தியேட்டர் சுவர் ஏறி குதித்த விஜய் ரசிகருக்கு அசம்பாவிதம் ஏற்பட்டது.

லியோ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. இந்தப் படத்துக்காகத்தான் விஜய் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர். லோகேஷ் கனகராஜ் விக்ரம் என்ற மெகா ஹிட் திரைப்படத்திற்கு பிறகு இந்தப் படத்தை இயக்கியிருப்பதால் ரசிகர்களுக்கு உருவான காத்திருப்பு அது. தமிழ்நாடு அரசு அளித்த அனுமதியின்படி சிறப்பு காட்சி இன்று காலை 9 மணிக்கு திரையிடப்பட்டது.

Vijay fan broke his leg after jumping over the theater wall without a ticket to watch Leo

ரசிகர்கள் கொண்டாட்டம்: காலை 9 மணிக்கு முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். விஜய்யின் இண்ட்ரோ காட்சியை ரொம்பவே ரசித்த அவர்கள் படத்தில் ஏகப்பட்ட விஷயங்களை ரசித்தனர். படத்தை பார்த்து முடித்ததும் படம் தங்களுக்கு பெரும் திருப்தியை கொடுத்ததாக அவர்கள் உற்சாகத்துடன் கூறி சென்றனர்.

இணையத்தில் லீக்: படத்துக்கு ஒரு பக்கம் பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் மறுபக்கம் நெகட்டிவ் விமர்சனங்களும் வந்துகொண்டிருக்கின்றன. இருந்தாலும் லியோ படம் கண்டிப்பாக வசூல் சாதனை படைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் அவர்கள். இதற்கிடையே படத்தின் சில காட்சிகளை ரசிகர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். ஒருகட்டத்தில் முழு படமும் இணையத்தில் லீக்காகிவிட்டது. இதனால் படக்குழு உச்சக்கட்ட அதிர்ச்சியில் இருக்கிறது.

டிக்கெட் ரேட் ஓவர்தான்: முதல் காட்சியை பார்க்க சென்ற ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது லியோவின் டிக்கெட் விலை அளவுக்கு அதிகமாக இருந்ததாக நொந்துகொண்டனர். இருந்தாலும் வேறு வழியில்லாமல் எவ்வளவு விலையாக இருந்தாலும் பரவாயில்லை பார்த்தே தீருவது என்ற முடிவெடுத்து முதல் காட்சிக்கு டிக்கெட்டுகளை வாங்கி சென்றனர் ரசிகர்கள்.

ரசிகருக்கு கால் முறிவு: அந்தவகையில் திருவண்ணாமலையில் ஒரு தியேட்டரில் முதல் காட்சி பார்ப்பதற்காக ரசிகர்கள் முண்டியடித்தனர். டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிட்டன. அப்போது ஒரு ரசிகருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. ஆனாலும் அந்த ரசிகர் படத்தை பார்த்தே தீருவது என்ற நோக்கத்தில் திரையரங்கத்தின் சுவர் ஏறி குதிக்க முயன்றார்.

ஆனால் அவரை தியேட்டர் ஊழியர்கள் உள்ளே விடவில்லை. அதனையடுத்து அந்த ரசிகர் தியேட்டருக்கு பின்புறம் சென்று அங்கிருந்த சுற்றுச்சுவரை தாண்டி குதித்தார். அப்போது தடுமாறி கீழே விழுந்த அவருக்கு காலில் முறிவு ஏற்பட்டது. அதனை கவனித்த காவல் துறையினர் அந்த ரசிகரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X