Vijay: ஏம்மா நில்லு.. இது வேணாமா.. விஜய் கொடுத்த பொருளை வாங்காமல் சென்ற இளம் பெண்.. என்ன ஆச்சு?

நெல்லை: சமீபத்தில் வரலாறு காணாத மழை பெய்து தூத்துக்குடி மற்றும் நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், அந்த மாவட்டத்தில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட மக்களை தேர்வு செய்து அவர்களுக்கு இன்று நேரில் சென்று நடிகர் விஜய் நிவாரண உதவிகளையும் உதவித் தொகையும் வழங்கினார்.

#NellaiWelcomesTHALAPATHY என்கிற ஹாஷ்டேக்கை போட்டு விஜய் ரசிகர்கள் தளபதி விஜய்யின் செயலை கொண்டாடி வருகின்றனர். அந்த நிகழ்ச்சியில் ஏகப்பட்ட சுவாரஸ்ய நிகழ்வுகள் நடைபெற்று வரும் நிலையில், இளம்பெண் ஒருவர் விஜய் கொடுத்த பொருளை வாங்காமல் சென்று விட்டார்.

Vijay fan girl needs selfie only not relief materials shocks fans

நிவாரணம் அளித்த விஜய்: அரிசி, காய்கறி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை நடிகர் விஜய் பொதுமக்களுக்கு வழங்கினார். மேலும், உயிரிழந்த நபருக்கு 1 லட்சம் ரூபாயும் வீடு இழந்தவர்களுக்கு 10 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை நிதியுதவி வழங்கி உள்ளார். சுமார் 1500 பேருக்கு நிவாரண பொருட்களை வழங்கிய விஜய் சிலர் கேட்டுக் கொள்ள அவர்களுடன் செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்தார்.

எதுவும் பேசவில்லை: மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி விட்டு நடிகர் விஜய் பேசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதுவும் பேசாமலே செயலை மட்டும் செய்து விட்டு செயல் வீரராக கிளம்பிச் சென்று விட்டார். அந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் வழங்கிய நிவாரண பொருளை ஒரு இளம்பெண் மட்டும் வாங்காமல் போய் விட்டார்.

பொருள் வேண்டாம் போட்டோ போதும்: நடிகர் விஜய்யை சந்தித்ததும் இளம் பெண்களுக்கு எல்லாம் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. சந்தோஷத்தில் துள்ளி குதிக்க ஆரம்பித்து விட்டனர். பலர் விஜய்யுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். அப்போது மாஸ்க் அணிந்து கொண்டு வந்த ஒரு இளம்பெண் விஜய்யை பார்த்த சந்தோஷத்தில் அவருடன் போட்டோ எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினார். ஏம்மா.. நில்லும்மா.. பொருள் வேண்டாமா என்பது போல விஜய் கேட்க, வேண்டாம் அண்ணா உங்களை பார்த்ததே போதும் என ஃபேன் கேர்ள் மொமண்டை காட்டி விஜய்யையே வியக்க வைத்து விட்டார்.

சரி போ: அந்த இளம் பெண் பொருள் வேண்டாம் என்று செல்ஃபி எடுத்துக் கொள்ள நிச்சயமா பொருள் வேண்டாமா என விஜய் கேட்க, வேண்டாம் என அந்த பெண் சொன்னதும் சரி போம்மா என விஜய் பொருளை கொடுக்காமல் அனுப்பிய காட்சிகள் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

மாஸ்க் கழட்டியிருக்கலாம்: விஜய்யை பார்த்து போட்டோ எடுத்துக் கொண்டு பொருள் வேண்டாம் என சென்ற அந்த பெண் மாஸ்க் கழட்டியிருக்கலாம் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். ஆனால், கொரோனா தொற்று பயம் காரணமாக பலரும் மாஸ்க் அணிந்து பாதுகாப்புடன் வந்ததை நல்லாவே பார்க்க முடிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X