'அந்த' கார்ட்டூனால் கடுப்பான மாஸ்டர் நடிகை.. நியூ வெர்சன் வெளியிட்ட விஜய் ரசிகர்.. இப்போ ஹேப்பியாம்!

சென்னை: கார்ட்டூனை பார்த்து கடுப்பான நடிகைக்காக விஜய் ரசிகர் நியூ வெர்சன் கார்ட்டூனை வெளியிட்டுள்ளார்.

Recommended Video

Video: Malavika Mohanan Bike racing | Master

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, ஸ்ரீமண் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் மாஸ்டர். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து விட்டது. ஆனால் படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.

தள்ளி போகும் ரிலீஸ்

தள்ளி போகும் ரிலீஸ்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் படம் ரிலீஸ் ஆகும் தேதி தள்ளி போகிறது. இதனால் படம் குறித்த அப்டேட் ஏதாவது வெளியாகுமா என காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.

குவாரண்டைன் கார்ட்டூன்

குவாரண்டைன் கார்ட்டூன்

இந்நிலையில் விஜய் ரசிகர் ஒருவர், 'குவாரண்டைன் நேரத்தில் மாஸ்டர் டீம்' என்ற ஒரு கார்ட்டூனை நேற்று ஷேர் செய்திருந்தார். அதில் விஜய், விஜய் சேதுபதி, அனிருத், லோகேஷ் கனகராஜ் என பலரும் அவரவர் வேலையை பார்ப்பது, லேப்டாப்பில் வேலை செய்வது, விளையாடுவது என இருந்தனர்.

கடுப்பான நடிகை

கடுப்பான நடிகை

மாளவிகா மோகனன் சமையல் செய்வது போல் இருந்தது அந்த கார்ட்டூன். இந்த கார்ட்டூனை ஷேர் செய்த அந்த ரசிகர், அதனை விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், லோகேஷ் கனகராஜ் உட்பட மாஸ்டர் டீமை சேர்ந்த பலருக்கும் டேக் செய்தார். அதனை பார்த்து செம கடுப்பாகிவிட்டார் மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனன்.

எப்போது சாகும்?

எப்போது சாகும்?

இந்த கார்ட்டூனை பார்த்து பதில் கூறிய அவர், ஒரு கற்பனையான "மூவி ஹவுஸில்" கூட ஒரு பெண்ணின் வேலை சமைப்பதுதானா? பெண்கள்தான் இதுபோன்ற வேலையை செய்ய வேண்டும் என்ற பாலின பாத்திரங்கள் எப்போது சாகும் என கேட்டு ச்சை என பதிவிட்டார்.

அவ்வளவு தானா தைரியம்?

அவ்வளவு தானா தைரியம்?

ஆனால் சிறிது நேரத்திலேயே தனது பதிவை நீக்கிவிட்டார் மாளவிகா மோகனன். ஆனாலும் அவரது பதிவின் ஸ்க்ரீன் ஷாட் சமூக வலைதளங்களில் வைரலானது. பலரும் அவ்வளவு தைரியமாக பேசினீர்கள் அதற்குள் ஏன் உங்கள் பதிவை நீக்கி விட்டீர்கள்? அவ்வளவு தானா உங்கள் தைரியம் என கேட்டனர்.

படிக்கும் மாளவிகா

படிக்கும் மாளவிகா

இந்நிலையில் அந்த கார்ட்டூனின் நியூ வெர்சனை அந்த ரசிகர் ரிலீஸ் செய்திருக்கிறார். அந்த புதிய கார்ட்டூனில் மாளவிகா மோகனன் டேபிளில் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டு, அவர் படிப்பது போல் உருவாக்கப்பட்டுள்ளது.

சந்தோஷமாக படியுங்கள்

சந்தோஷமாக படியுங்கள்

அந்த கார்ட்டூனை மாளவிகா மோகனன் டிவிட்டர் ஹேண்டிலுக்கு டேக் செய்த அந்த ரசிகர், ஓகே உங்களுக்காக நான் அதை சரிசெய்து விட்டேன்.. சந்தோஷமாக படியுங்கள்.. ரூமில் மற்றவர்களை போல நீங்களும் ஃபன் பண்ணுங்கள் என்று பதிவிட்டிருந்தார்.

உங்களுக்கு எப்படி தெரியும்?

உங்களுக்கு எப்படி தெரியும்?

இந்த நியூ வெர்சன் கார்ட்டூனை பார்த்த மாளவிகா மோகனன், ஐ லவ் திஸ் வெர்சன் என தெரிவித்துள்ளார். மேலும் எனக்கு படிப்பது பிடிக்கும் என உங்களுக்கு எப்படி தெரியும் என்று கெட்டு இதயத்தை பதிவிட்டுள்ளார் மாளவிகா மோகனன். அவரது இந்த பதிவை 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X