விஜய் இதைத்தான் விரும்புவாரு... திருச்சி ரசிகர் செய்த வேற லெவல் செயல்
திருச்சி : நடிகர் விஜய், பூஜா ஹெக்டே உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து இன்றைய தினம் வெளியாகியுள்ள படம் பீஸ்ட். இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக இருந்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்புகளை படம் பூர்த்தி செய்யவில்லை. மாஸாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காமெடி சரவெடியாக படம் ரிலீசாகியுள்ளது.

நடிகர் விஜய்
நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், செல்வராகவன், யோகிபாபு, விடிவி கணேஷ் உள்ளிட்டவர்கள் நடிப்பில் இன்றைய தினம் சர்வதேச அளவில் வெளியாகியுள்ள படம் பீஸ்ட். படம் ரசிகர்களிடையே மிகுதியான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய படம் தவறியுள்ளது.

முதல் நாள் முதல் ஷோ
படத்தின் முதல் ஷோ அதிகாலை 4 மணிக்கு திரையரங்குகளில் திரையிடப்பட்டது. ரசிகர்கள் நள்ளிரவு முதலே காத்திருந்து முதல் நாள் முதல் ஷோவை கண்டு களித்தனர். முன்னதாக விஜய் கட்அவுட்டிற்கு பாலாபிஷேம் உள்ளிட்டவற்றை ரசிகர்கள் செய்து மகிழ்ந்தனர். தாரை, தப்பட்டை உள்ளிட்டவற்றுடன் திரையரங்குகளில் சென்று விஜய் படத்தை கொண்டாடி மகிழ்ந்தனர்.

திருச்சியில் சிறப்பான சம்பவம்
இந்நிலையில் திருச்சியை சேர்ந்த விஜய் மக்கள் இயக்க முன்னாள் மாநில தலைவர் ஆர்கே ராஜா சத்தமே இல்லாமல் சிறப்பான செயலை செய்து முடித்துள்ளார். அங்கு கங்காரு இல்லத்தில் பிள்ளைகளால் கைவிடப்பட்ட 50க்கும் மேற்பட்டவர்களை அவர் பீஸ்ட் படம் பார்க்க அழைத்து சென்றுள்ளார்.

வேற லெவல் சம்பவம்
அவர்களை வாகனத்தில் அழைத்து வந்து சோனா, மீனா திரையரங்கில் படம் பார்க்க செய்துள்ளார். மேலும் இடைவேளையின்போது பாப்கார்ன், குளிர்பானம், காபி உள்ளிட்டவற்றையும் வழங்கி அசத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய மகிழ்ச்சியையும் பகிர்ந்துள்ளார்.

விஜய் இதைத்தான் விரும்புவார்
இதுபோன்ற செயல்களைதான் விஜய் விரும்புவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சந்தோஷத்தில் மிகப்பெரிய சந்தோஷமே மற்றவர்களை சந்தோஷப்படுத்திப் பார்ப்பதுதான் என்று கூறிய ராஜா, அவர்களின் முகத்தில் நீண்ட நாட்கள் கழித்து படம் பார்க்கும் சந்தோஷம் தெரிந்ததாகவும் அந்த சந்தோஷத்தில் தான் விஜய்யை பார்த்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் நெகிழ்ச்சி
மற்ற ரசிகர்கள், விஜய்யின் தாரை தப்பட்டை, விஜய் கட் அவுட்டிற்கு பாலாபிஷேகம், பேனர்கள் வைப்பது என்று செயல்பட்ட நிலையில், ஆர்கே ராஜா, முதியவர்களை பீஸ்ட் படத்தை பார்க்க செய்துள்ளது திருச்சி ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கங்காரு இல்லத்தை சேர்ந்தவர்களும் இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications











