விஜய் வென்றால் தமிழ்நாட்டில் இருந்து யார் வந்தாலும் லாட்டரி ஃப்ரீ.. சேட்டனுக்கு எவ்வளவு வெறி
சென்னை: தமிழ்நாடு அரசியலில் நடிகர் விஜய் என்ட்ரி ஏற்படுத்திய தாக்கம் என்ன என்பது குறித்து வரும் மே 4ஆம் தேதி தெரிய வரவுள்ளது. இப்படி இருக்கையில் நடிகர் விஜய் தேர்தலில் வெல்வார், தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆவார், அவர் முதலமைச்சர் ஆன பின்னர் தமிழ்நாட்டில் இருந்து யார் வந்து என்னைச் சந்தித்தாலும் அவர்களுக்கு நான் ஒரு லாட்டரி சீட்டை இலவசமாக கொடுக்கிறேன் என்று லாட்டரி விற்பனை செய்யும் ஒருவர் தெரிவித்துள்ள வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
நடிகர் விஜய் கடந்த 2024 ஆம் ஆண்டு தனது ரசிகர் மன்றத்தை தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியாக மாற்றினார். அதன் பின்னர் அவர் எதிர்கொள்ளும் முதல் பொதுத் தேர்தல் என்றால் அது, 2026 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் தான். இந்நிலையில் இவரது கட்சி முதல் தேர்தலிலேயே அதிக அளவில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று அவரது ரசிகர்களும், ஆதரவாளர்களும் நம்பிக்கையில் உள்ளனர்.
அதேபோல் அரசியல் வட்டத்தில் விஜய், கணிசமான வாக்குகளைப் பெறுவார், அவரே வெல்வாரா என்பது கேள்விக்குறிதான் என்றும் கூறி வருகிறார்கள். இப்படி இருக்கையில் இன்னும் ஒரு வாரத்தில் தேர்தல் முடிவுகள் வெளிவரவுள்ளது. மே 4ஆம் தேதி மதியமே தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் யார், எந்த கட்சி ஆட்சி அமைக்கப் போகிறது என்பது தெரிந்துவிடும். அப்படியே இழுபறி என்றாலும், மாலைக்குள் எல்லாமே தெரிந்துவிடும்.

லாட்டரி இலவசம்: இப்படி இருக்கையில் நடிகர் விஜய்க்கு தென்னிந்திய மாநிலங்களில் தமிழ்நாட்டைக் கடந்தும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். அதிலும் கேரளாவில் அதிக அளவில் உள்ளனர். இப்படி இருக்கையில் நடிகர் விஜய் ரசிகரும் லாட்டரிச் சீட்டு விற்பவருமான ஒருவர், " தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஜய் மற்றும் அவரது கட்சியினர் வென்று, விஜய் முதலமைச்சர் ஆக வேண்டும். அவருக்கு கேரளாவில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். விஜய் வென்று முதலமைச்சர் ஆக வேண்டும். அப்படி நடக்கும் போது, தமிழ்நாட்டில் இருந்து எத்தனை பேர் வந்தாலும் அவர்களுக்கு ஒரு லாட்டரிச் சீட்டு இலவசமாக கொடுக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
ரியாக்ஷன்ஸ்: இவரது இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் பலரும் விஜய்க்கு கேரளாவில் இருந்து வரும் பேரன்பைப் பாருங்கள். இப்படி வேறு எந்த நடிகருக்காவது இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதேபோல், சில நெட்டிசன்களோ, இந்த லாட்டரி சீட்டு விற்பவர் இப்படி கூற காரணம் விஜய் முதலமைச்சர் ஆக மாட்டார் என்பது தான். அதனால் தான் இப்படிக் கூறுகிறார். இல்லை என்றால், அவர் எத்தனை பேருக்கு லாட்டரிச் சீட்டு கொடுப்பார்? அதுவும் அந்த நபர் விவரமாக கேரளாவில் எந்த ஏரியா என்று கூறவே இல்லை கவனித்தீர்களா என்றும் பதிவிட்டு வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications