நீங்களும் பெண்தானே.. விஜய்யிடமிருந்து தள்ளியிருங்கள்.. திரிஷாவுக்கு ரசிகை வைத்த கோரிக்கை
சென்னை: விஜய்யின் நடிப்பில் கடைசியாக GOAT திரைப்படம் வெளியானது. அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றது. இப்போது அவர் ஹெச்.வினோத் இயக்கத்தில் தளபதி 69 படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படம்தான் அவரது கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் அவர் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி முழுக்க முழுக்க அரசியலில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். சூழல் இப்படி இருக்க திரிஷாவுக்கு விஜய்யின் ரசிகை வைத்த கோரிக்கை ட்ரெண்டாகியிருக்கிறது.
விஜய்யும், திரிஷாவும் கோலிவுட்டின் ரீல் ஜோடிகளில் ஃபேமஸானவர்கள். இரண்டு பேரும் சேர்ந்து கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி, லியோ படங்களில் நடித்திருக்கிறார்கள். அவர்கள் ஸ்க்ரீனில் தோன்றினாலே ரசிகர்கள் ஆர்ப்பரிப்பார்கள். அந்த அளவுக்கு அவர்களுக்கிடையேயான கெமிஸ்ட்ரி பக்காவாக சினிமாவில் ஒர்க் அவுட் ஆகும். பல வருடங்களுக்கு பிறகு லியோ படத்தில்தான் அவர்கள் மீண்டும் இணைந்தார்கள். அப்படத்தில் இரண்டு பேருக்குமிடையே லிப் லாக் சீனும் இருந்தது.

ஒரு பாடலுக்கு நடனம்: அதேபோல் பீக்கில் இருக்கும் திரிஷா பெரும்பாலும் ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போடமாட்டார். ஆனால் விஜய் நடித்த GOAT படத்தில் மஞ்சள் புடவையில் விஜய்யுடன் ஒரு பாடலுக்கு செம ஆட்டம் போட்டிருந்தார். அதனைப் பார்த்த ரசிகர்கள் அட விஜய்க்காக திரிஷா இதெல்லாம் செய்கிறாரே என்று கமெண்ட்ஸ்களை பறக்கவிட்டனர். அதுமட்டுமின்றி இரண்டு பேருக்குமான கெமிஸ்ட்ரி முழு படமானாலும் சரி; ஒரு பாடலானாலும் சரி அள்ளுதே என்றும் கூறினார்கள்.
தமிழக வெற்றிக் கழகம்: முக்கியமாக அந்தப் பாடலில் திரிஷா அணிந்திருந்த புடவையின் நிறம்; விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடி நிறத்தில் இருந்ததாகவும் ரசிகர்கள் ஓபனாக பேசினார்கள். இதற்கிடையே விஜய்யையும், திரிஷாவையும் இணைத்து தொடர்ந்து கிசுகிசுக்கள் பறந்துவருகின்றன. ஆனால் அதற்கு இரண்டு பேருமே மௌனத்தையே பதிலாக கொடுத்துவருகிறார்கள். மேலும் இந்த விவகாரத்தால்தான் விஜய்யும், அவரது மனைவி சங்கீதாவும் பிரிந்திருக்கிறார்கள் என்றும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது.
கோவா பயணம்: சூழல் இப்படி இருக்க சில நாட்களுக்கு முன்பு நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணம் கோவாவில் நடைபெற்றது. அதில் விஜய், திரிஷாவும் கலந்துகொண்டார்கள். அந்த விவகாரம் பெரும் விவாதத்தை கிளப்பியிருக்கிறது. ஏனெனில், அத்திருமணத்தில் கலந்துகொள்வதற்காக இரண்டு பேரும் தனி விமானத்தில் சென்றதாக கூறப்படுகிறது. அதுதொடர்பான புகைப்படங்களும் வெளியாகின. இப்படி அவர்கள் இரண்டு பேரும் தனி விமானத்தில் சென்றதால் மீண்டும் இரண்டு பேரையும் இணைத்து பலர் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
ரசிகை கோரிக்கை: இந்நிலையில் லியோ படத்தின் ஷூட்டிங் சமயத்தில் விஜய்யுடன் திரிஷா எடுத்துக்கொண்ட புகைப்படத்தின் கீழே; விஜய்யின் ரசிகை ஒருவர் திரிஷாவுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார். அவர் போட்டிருக்கும் கமெண்ட்டில், ""விஜய்யுடன் புகைப்படம் எடுக்கக்கூடாது. அவருடைய புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவேற்றக்கூடாது"" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
நீங்களும் பெண்தானே: மேலும் மற்றொரு கமெண்ட்டில் அந்த ரசிகை, “நீங்கள் போஸ்ட் போடுறீங்க. ரசிகர்கள் வதந்திகளை கிளப்பிவிடுகிறார்கள். ப்ளீஸ் நீங்கள் விஜய்யிடமிருந்து கொஞ்சம் தள்ளி இருந்தால் நல்லது. புரிந்துகொள்ளுங்கள். நீங்களும் ஒரு பெண்தானே. நேத்து போட்ட போஸ்ட் இப்போ வைரலாக போகிறது. ஏன் உங்களிடம் பணம் இல்லையா. தனியாக போகலாம் இல்லையா. எதற்காக விஜய்யுடன் வேண்டுமென்று பயணம் செய்கிறீர்கள். இது விஜய் ரசிகர்களில் ஒருவராக நான் உங்களிடம் கேட்கும் கேள்வி”என்று குறிப்பிட்டிருக்கிறார்


Click it and Unblock the Notifications











